தங்கம் விலையானது இரண்டாவது அமர்வாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
இது வர்த்தகர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. இது விலை இன்னும் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய லெவல்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய லெவல் உடைப்பு
தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்று சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய முடிவு விலையினை விட, இன்று மேலாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.
தங்கம் விலை ரேஞ்ச் பவுண்ட்
தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது அதிகபட்சமாக 1810.60 டாலராகவும், இதே குறைந்தபட்சமாக 1780.60 டாலர்களாக வர்த்தகமாகியுள்ளது. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது தற்போதும் கூட 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் தங்கம் விலை இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ரூபாய் Vs தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் அதே நேரத்தில், இந்திய சந்தையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், அது தங்கத்தின் மதிப்பில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது இன்னும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.
டாலர் Vs தங்கம்
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடந்து வலுவடைந்து வரும் நிலையில், தங்கம் மதிப்பானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து வலுவடைந்து வரும் டாலரின் மதிப்பானது டாலரில் தங்கம் வாங்குபவர்களுக்கு, இன்னும் விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது.
பணவீக்கம் Vs தங்கம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மதிப்பும் சற்று நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது வட்டி விகிதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதார ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்களின் எதிர்பார்ப்பு
கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் புதிய உச்சத்தினை எட்டலாம். இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் உடைக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். எனினும் இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், அது எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டியும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
தேவை அதிகரிக்கலாம்
இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு உச்சமான 56,191 ரூபாயினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு ரீதியாகவும் தங்கத்திற்கான தேவை, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள்
உச்சம் தொடும் பங்கு சந்தைகள் தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என்றாலும், தொடர்ந்து இது நீடிக்குமா? என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும். நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 2.05 டாலர் குறைந்து, 1792.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 23.892 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 126 ரூபாய் குறைந்து, 46,770 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 87 ரூபாய் அதிகரித்து, 63,380 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 30 ரூபாய் குறைந்து, 4,430 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 35,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 33 ரூபாய் குறைந்து, 4,833 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 38,664 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 0.10 பைசா அதிகரித்து, 67.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 67,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இது போல வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்பதால் அதனையும் வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications