தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 4வது அமர்வாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை  வீழ்ச்சி

தங்கம் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 4வது நாளாக தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து அழுத்தத்திலேயே இருந்து வருகின்றது. இது வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கட்டாயம் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்ற கருத்துக்கு மத்தியில், தொடர்ந்து தங்கம் விலையானது அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.

முக்கிய லெவல் உடைப்பு

முக்கிய லெவல் உடைப்பு

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது 1700 டாலர்களை உடைக்காமலேயே, ஒரு ரேஞ்ச் பவுண்டிலேயே வர்த்தகமாகி வந்தது. இதன் காரணமாக இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தால் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த அமர்வில் 1700 டாலர்களுக்கு கீழாக சென்றுள்ளது. ஆக மேற்கொண்டு தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் முக்கிய காரணம்

இது தான் முக்கிய காரணம்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது அழுத்தத்திலேயே காணப்படுகிறது.

குறையும் முதலீடு

குறையும் முதலீடு

ஒரு புறம் வட்டியில்லா முதலீடு என்றாலும், தொடர்ந்து டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், அது டாலரில் முதலீடு செய்யும் மற்ற கரன்சி முதலீட்டாளர்களுக்கு மிக விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதுவே தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலை மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

4மாத சரிவில் தங்கம்

4மாத சரிவில் தங்கம்


கடந்த அமர்விலேயே இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது 4 மாத சரிவான 49,679 ரூபாயினை எட்டியது. இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 56,675 ரூபாயினையும் எட்டியது.
சர்வதேச காரணிகள் தங்கத்திற்கு எதிராக இருக்கும் நிலையில், சீனாவிலும் தேவை குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவும் மேற்கோண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 6.35 டாலர்கள் குறைந்து, அவுன்ஸுக்கு 1671 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலையானது மேற்கொண்டு சற்று சரியலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.73% குறைந்து, 19.128 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மேற்கொண்டு வெள்ளி விலையும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 49,240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 80 ரூபாய் குறைந்து, 56,337 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 54 ரூபாய் குறைந்து, 4626 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து, 37,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 5046 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 472 ரூபாய் குறைந்து, 40,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 590 ரூபாய் குறைந்து, 50,460 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 61.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 616 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 61,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,260

மும்பை - ரூ.45,800

டெல்லி - ரூ.45,950

பெங்களூர் - ரூ.45,850

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,260

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+