தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. என்ன காரணம்.. இன்றைய நிலவரம் என்ன..!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வந்தது. அப்படியே 1800 டாலர்களுக்கு மேல் வர்த்தகமானாலும் முடிவில் 1800 டாலர்களுக்கும் கீழாகவே வர்த்தகமாகும்.

அப்படித் தான் கடந்த அமர்விலும் காணப்பட்டது. எனினும் இன்று தொடக்கத்திலேயே 1800 டாலர்களுக்கு மேலாக கேப் அப் ஆகி தொடங்கியுள்ளது. ஆக இது தங்கம் விலை மேலும் ஏற்றம் காணலாம் என்பது போலவே காணப்படுகின்றது.

உணர்வுபூர்வமாக தங்கம் விலையானது 1800 டாலர்களை உடைத்து மேலே சென்றால் தான் இன்னும் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கை முதலீட்டாளார்கள் மத்தியில் நிலவி வந்தது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்று மீண்டும் ஏற்றம் காணலாம். நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இது சாதகமான விஷயமாக உள்ள நிலையில், பிசிகல் தங்கத்திற்கான தேவையும் வரவிருக்கும் சீசனில் அதிகரிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

தற்போது ஒமிக்ரான் அச்சம் பல நாடுகளிலும் தொடந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் மீண்டும் உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது தற்போது சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் மூன்று வாரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது.இது மேற்கோண்டு தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மதிப்பானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. மேலும் இந்தியாவில் வரவிருக்கும் திருமண பருவம், விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 7.40 டாலர்கள் அதிகரித்து, 1805.55 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்றும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து, 22.492 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிந்து, தற்போது மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 48,678 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்ம் & நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிற்து.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை அதிகரித்து இருந்தாலும், இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது சற்று குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 63 ரூபாய் குறைந்து, 62,089 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 49 ரூபாய் அதிகரித்து, 4,594 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 392 ரூபாய் அதிகரித்து, 36,752 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து, 5,012 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, 40,096 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 65.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 659 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ருபாய் அதிகரித்து, 65,900 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இதுவே மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகரித்திருந்தாலும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+