தங்கத்தின் விலையானது கடந்த அமர்வில் சற்றே சரிவினைக் கண்டிருந்தாலும், முடிவில் மீண்டும் ஏற்றம் கண்டே முடிவடைந்துள்ளது. இது இன்றும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது நடப்பு வார உச்சமான 1881.60 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? தற்போது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இன்னும் விலை சரியுமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? கூடுமா? குறையுமா? வெள்ளியின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
நீடிக்கும் குழப்பம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற நிலையில் இருந்து, ரஷ்ய படைகள் முகாமிற்கு திரும்பியதாக அதிபர் விளாடிமிர் புதின் கூறியது, முதலீட்டாளர்கள் இடையே பெரும் நிம்மதியினை கொடுத்தது. எனினும் அமெரிக்கா மற்றும் நேட்டோவும் ரஷ்யா இன்னும் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறவில்லை. எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்று மிகப்பெரிய குண்டினை போட்டுள்ளன. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, தொடர்ந்து சர்வதேச சந்தையில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
8 மாத உச்சத்தில் தங்கம் விலை
நடப்பு வாரத் தொடக்கத்தில் 8 மாத உச்சத்தினை தொட்ட தங்கம் விலையானது, மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது உக்ரைன் ரஷ்யா பதற்றம், பத்திர சந்தையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் தான் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்களானது 1858 - 1845 டாலர்களாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 1884- 1896 டாலர்களாகவும் உள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் லெவலானது 23.30 - 23.10 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 23.88 - 24.10 டாலர்களாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவலாக 49,400 - 49,240 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 49,850 - 50000 ரூபாயாகவும் உள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் லெவலானது 62,900 - 62,660 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலானது 63,800 - 64,100 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.
விரைவில் வட்டி அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை இந்த முறை கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தொழிற்துறை உற்பத்தி மற்றும் பல்வேறு காரணிகளும் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. இதன் காரணமாக விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 3.20 டாலர்கள் அதிகரித்து, 1874.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.525 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 148 அதிகரித்து, 49,766 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், தங்கம் விலையானது மேற்கொண்டு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு சற்று குறைந்து, 63,224 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. வெள்ளி விலையிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 4,710 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 37,680 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 53 ரூபாய் அதிகரித்து, 5,138 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து, 41,104 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,380 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 68 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 688 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.எனினும் வெள்ளி விலையானது குறைந்து காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம். இதே முதலீட்டு ரீதியாக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!



Click it and Unblock the Notifications