தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டாலும். வார இறுதியில் சற்று குறைந்து தான் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்தில் எப்படியிருக்குமோ? மீடியம் டெர்மில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

 

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்பட்டாலும், தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.

இதனையடுத்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது எப்படியுள்ளது? இனி குறையவே குறையாதா? இனி விலை எப்படியிருக்கும், நிபுணர்களின் கருத்து என்ன?

பத்திர சந்தை அழுத்தம்

பத்திர சந்தை அழுத்தம்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று அதிகரித்து இருந்தாலும், பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தையானது, தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது மேற்கொண்டு விரைவில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்தைபோல பணவீக்கமானது மீண்டும் அதிகரித்த நிலையிலேயே வந்தது. இதற்கிடையில் விரைவில் வட்டி விகிதத்தினை அமெரிக்காவின் மத்திய வங்கியானது மார்ச் மாதத்தில் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். ஃபெடரல் வங்கி 2022ம் ஆண்டில் வட்டி விகிதத்தினை மூன்று முறை அதிகரிக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்திரம் வாங்குதல் குறைப்பு
 

பத்திரம் வாங்குதல் குறைப்பு

அமெரிக்க மத்திய வங்கியானது முன்னதாகவே பத்திரம் வாங்குதலை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 2022க்கு முன்னதாக முழுமையாக நிறுத்தப்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் VS தங்கம்

பணவீக்கம் VS தங்கம்

பணவீக்கம் உச்சத்தினை தொட்டு வரும் நிலையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம், ஒரு வேளை வட்டி விகிதம் அதிகரித்தால், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது அமெரிக்கா மட்டும் அல்ல, ஜப்பானிலும் விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

சீனாவின் முக்கிய காரணங்கள்

சீனாவின் முக்கிய காரணங்கள்

சீனாவின் சில்லறை விற்பனை மற்றும் தொழிற்துறை உற்பத்தி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மக்கள் வங்கியானது மீடியம் டெர்ம் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. இது மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிகல் தங்கத்திற்காக தேவை

பிசிகல் தங்கத்திற்காக தேவை

பிசிகல் தங்கத்திற்கான தேவையானது சீனாவிலும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இரண்டாவது பெரிய நுகர்வோரான இந்தியாவிலும், ஓமிக்ரான் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வரும் நிலையில், தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் VS தங்கம்

டாலர் VS தங்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். இது இன்னும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1819.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தற்போது தங்கம் விலை சற்று அதிகரித்து இருந்தாலும்,மீடியர் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.035 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், மீண்டும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து, 47,869 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 279 ரூபாய் அதிகரித்து, 61,882 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை இன்று தற்போது வரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 4,534 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,272 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் தற்போது வரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 4,944 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,552 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இன்று தற்போது வரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 65.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம். சற்று பொறுத்திருந்து வாங்கும்போது லாபகரமானதாக இருக்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 17th January 2021: gold prices may down on fed rate hike bets

gold price on 17th January 2021: gold prices may down on fed rate hike bets/தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X