ரூ.8300 சரிவில் தங்கம் விலை.. இன்றும் சரிவு தான்.. இது சூப்பர் சான்ஸ் ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று சர்வதேச சந்தை, இந்திய சந்தை, ஆபரண சந்தை என அனைத்திலும் குறைந்து காணப்படுகின்றது.

 

இது தங்க ஆர்வலர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கிடைத்த சூப்பர் சான்ஸாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஆனால் தொடர்ச்சியான ஏற்றத்திற்கு பிறகு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்று தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது தொடருமா? அல்லது இனி ஏற்றம் காணுமா? இனி என்ன செய்யலாம்? வாங்கலாமா வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..! தங்கம் விலை குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பை பாருங்க.. இன்று என்ன நிலவரம்..!

ரூ.8300 சரிவில் தங்கம் விலை

ரூ.8300 சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 8,300 சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் 47,900 ரூபாய்க்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. அடுத்த முக்கிய சபோர்ட் லெவலாக 47,300 ரூபாய் பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 48,300 ரூபாயாக பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் அமெரிக்க பத்திர சந்தையானது தங்கத்திற்கு எதிராக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தை காரணமாக, டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது. குறிப்பாக 10 வருடம் மற்றும் 5 வருட பத்திரங்கள் 2 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதே 2 வருட பத்திரமானது பிப்ரவரி 2020 லெவலை எட்டியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

அடுத்த சில மாதங்களில் முக்கிய நடவடிக்கை
 

அடுத்த சில மாதங்களில் முக்கிய நடவடிக்கை

அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்ததைபோலவே ஏற்றம் கண்ட நிலையில், இது அடுத்த சில மாதங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திலேயே அமெரிக்காவின் மத்திய வங்கியானது 2022ம் ஆண்டில் வட்டி விகிதத்தினை மூன்று முறை அதிகரிக்க திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாகவும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரானையும் கருத்தில் கொள்ளுங்கள்

ஓமிக்ரானையும் கருத்தில் கொள்ளுங்கள்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது குறிப்பாக வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ஓமிக்ரான் பரவல், தடுப்பூசி விகிதம், லாக்டவுன் நடவடிக்கைகள் குறித்தும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. இது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கிடைத்த லாபத்தினை புராபிட் புக்கிங் செய்யலாம். இதுவும் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இது இன்னும் சற்று குறைந்த பின்னர் மீண்டும் குறைந்த விலையில் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் VS தங்கம்

டாலர் VS தங்கம்

அதிகரித்து வரும் பத்திர ஏற்றத்தின் மத்தியில், தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1816.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.902 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை ஒரே விலையாக உள்ளது. அதே நேரம் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 47,869 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை இதுவரை உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 158 ரூபாய் குறைந்து, 61,734 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் இதுவரையில் உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 2 ரூபாய் குறைந்து, 4,532 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 36,256 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 4,942 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 39,536 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரன வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். மீடியம் டெர்மிலும் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 18th January 2021: gold prices fall amid stronger bond yields

gold price on 18th January 2021: gold prices fall amid stronger bond yields/ரூ.8300 சரிவில் தங்கம் விலை.. இன்றும் சரிவு தான்.. இது சூப்பர் சான்ஸ் தான்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X