தங்கம் விலை எப்படியிருக்கும்.. நிபுணர்களின் பளிச் கணிப்ப பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வார தொடக்கத்தில் தங்கம் விலையானது சரிவுடன் தொடங்கிய நிலையில், வாரத்தின் பிற்பாதியில் மீண்டும் ஏற்றத்தினைக் கண்டது. இது நிபுணர்களின் கணிப்பினை போல் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தினை கண்டு விடுமோ?

கடந்த வாரத்தில் தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கும் மேலாக இருந்து வந்தது. எனினும் வரும் வாரத்தில் இது தொடருமா? இனி எப்படியிருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல் என்ன? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

தங்கம் விலையானது 1800 டாலர்களை உடைத்து மேலே சென்றால், இன்னும் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கை முதலீட்டாளார்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இதனை போலவே கடந்த வார இறுதியில் உச்சத்தினை எட்டியது. இது வரும் வாரத்தில் தொடருமா? என்ற கருத்து நிலவி வருகின்றது.

ஏற்றத்தில் தங்கம் விலை

ஏற்றத்தில் தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 1750 டாலர்காள் என்ற இடத்தில் இருந்து, தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலையானது 1815 டாலர்களை தொட்டது. இது வரு வாரத்தில் தொடருமா? அடுத்த முக்கிய லெவல் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இது பணவீக்க அச்சத்திற்கு மத்தியில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

தங்கம் விலையானது தற்போது 1800 டாலர்களுக்கு கீழாக முடிவடைந்துள்ள நிலையில் வரும் வாரத்தில், தங்கம் விலையானது மீண்டும் உச்சத்தினை தொடுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் தங்கத்தின் அடுத்த இலக்கானது 1935 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறையலாம்
 

குறையலாம்

கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது சரிவினைக் கண்ட நிலையில், அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான விலை குறியீடானது, ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு 9.6% எட்டியது. இதனால் வாரத்தின் பிற்பாத்தியில் தங்கம் விலையானது மீண்டும் உச்சத்தினை தொட்டது. இதற்கிடையில் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது. ஆக எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிண்றது.

எவ்வளவு குறையும்

எவ்வளவு குறையும்

தங்கம் விலையானது அப்படி குறையும் பட்சத்தில் மீடியம் டெர்மில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1770 டாலர்கள் வரையில் செல்லலாம். மேலும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது அடுத்த அஆண்டின் தொடக்கத்தில் வட்டி விகிதத்தில் மாற்றாம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டிற்குள் மூன்று முறை வட்டியில் அதிகரிப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்யப்படும் பட்சத்தில் வட்டியில்லா முதலீடானது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், ஒமிக்ரான் அச்சம் எழுந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு வேலை ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இது பொருளாதாரத்தில் மிஈண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தினால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பிசிகல் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தற்போது பணவீக்கம் என்பது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது, இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் சரிவில் ரூபாய்

தொடர் சரிவில் ரூபாய்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இது பரவி வரும் ஓமிக்ரான் அச்சன், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தித்தியில், தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் தங்கம் விலையானது அதிகரிக்க இது ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,594 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு, 36,752 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 5,012 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40,096 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ருபாய் குறைந்து, 66,000 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இனி என்ன செய்யலாம்?

இனி என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 19th December 2021: gold price may touch $1835 into 2022

gold price on 19th December 2021: gold price may touch $1835 into 2022/தங்கம் விலை எப்படியிருக்கும்.. நிபுணர்களின் பளிச் கணிப்ப பாருங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X