தங்கம் விலையானது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது.
கடந்த அமர்வில் தங்கம் விலையானது பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று தங்கத்தினை வாங்கலாமா? வேண்டாமா? தற்போதைய சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய காரணம் இது தான்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது மேற்கொண்டு, தொடர்ந்து வலுவடைந்து கொண்டே வருகின்றது. தொடர்ந்து வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.
பத்திர சந்தை ஏற்றம்
சர்வதேச அளவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது பங்கு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் ரெசசன் அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டியுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்படுகின்றன. தங்கத்திலும் முதலீடுகள் குறைந்துள்ளன.
எக்ஸ்பென்சிவ் தங்கம்
டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், டாலரின் மதிப்பில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு, விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
எவ்வளவு அதிகரிக்கலாம்?
வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகளாவது அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மேற்கோண்டு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அதிகளவிலான வட்டி அதிகரிப்பு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ரெசசன் அச்சம்
சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தினை அதிகரிக்க வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும் கூட, உடனடியாக பணவீக்கம் கட்டுக்குள் வந்து விடாது, வட்டி அதிகரிப்பு மட்டுமே போதாது என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 4 டாலர்கள் குறைந்து, 1706.15 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் 1% மேலாக குறைந்து, 18.648 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்னும் சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 105 ரூபாய் குறைந்து, 50,260 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 401 ரூபாய் குறைந்து, 55,690 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 30 ரூபாய் குறைந்தும், 4658 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 37,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 5081 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 40,648 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,810 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.46,580
மும்பை - ரூ.46,300
டெல்லி - ரூ.46,300
பெங்களூர் - 46,350
கோயம்புத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,580
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications