பட்ஜெட் நாளில் மக்களை குளிர வைத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க..!

இன்னும் சிறிது நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.

சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் ஆபரண தங்கம் விலையானது தங்க ஆர்வலகளை குதூகலப்படுத்தும் விதமாக சற்று குறைந்துள்ளது.

இதற்கிடையில் இன்றைய மத்திய பட்ஜெட் அமர்வில் தங்கத்தின் மீதான இறக்குமதி குறைக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் நகை ஏற்றுமதியினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து,1797.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.523 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. அதே நேரம் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு சற்று குறைந்து,47,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் நடப்பு கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 60,992 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,516 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 36,128 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4928 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 39,424 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினையும் குறைந்துள்ளது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+