இன்றைய மத்திய பட்ஜெட் அமர்வில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அப்படி ஏதும் குறைக்கப்படவில்லை. மாறாக இதில் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் வைரத்தின் மீதான சுங்க வரியானது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதமானது தற்போது 7.5% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இமிடேஷன் நகைக்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று காலை தடுமாற்றத்தில் இருந்த தங்கம் விலையானது, தற்போது கிடு கிடுவென ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இதற்கு ஒரு புறம் சர்வதேச சந்தையானது காரணமாக இருந்தாலும், மறுபுறம் எதிர்பார்த்தைபோல தங்கத்தின் மீதான வரியானது குறைக்கபபடவில்லை என்பதும் தங்கத்திற்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி
இந்திய சந்தையினை பொறுத்த வரையில், பிப்ரவரி கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த கான்ட்ராக்டில் ரோல் ஒவர், புராபிட் புக்கிங் காரணமாகவும் தங்கம் விலையானது கிடு கிடு ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் ஏப்ரல் கான்ட்ராக்டில் வாங்கி வைக்கலாம்.
டாலர் மதிப்பு சரிவு
இதற்கிடையில் டாலரின் மதிப்பு சரிவின் காரணமாக சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தூள் கிளப்பி வருகின்றது. இன்று காலை அமர்வில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. எனினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 10.70 டாலர்கள் அதிகரித்து,1805.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நல்ல ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2% அதிகரித்து, 22.845 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது இன்று காலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது (5 மணியளவில்) சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 430 ரூபாய் அதிகரித்து, 48,062 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 899 ரூபாய் அதிகரித்து, 61,875 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையும் உடைத்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
இந்திய கமாடிட்டி மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து இருந்தாலும், ஆபரணத் தங்கம் விலையானது இன்று காலை சற்று குறைந்த நிலையில் அப்படியே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,516 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 36,128 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று காலையில் குறைந்த நிலையில் அப்படியே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4928 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 39,424 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதுவும் கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினையும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டால் விலை குறையலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications