கிட்டத்தட்ட 2 வார சரிவில் தங்கம் விலை.. சென்னையில் என்ன நிலவரம்..?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் (Gold) மூன்றாவது வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது.

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை என்ன?இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

2 வார சரிவில் தங்கம்

2 வார சரிவில் தங்கம்

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் பத்திர சந்தையானது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேவை

தேவை

தங்கத்தின் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் மெதுவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் தேவையானது இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பும் வலுவடைந்து காணப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

1% சரிவில் தங்கம்

1% சரிவில் தங்கம்

கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1% சரிவில் காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் சரிவில் காணப்படுகிறது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

சுதந்திரம் கிடைக்குமா?

சுதந்திரம் கிடைக்குமா?

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலை சந்தித்து அமெரிக்காவின் பணவீக்கம் பற்றி விவாதித்தார். மேலும் அரசியல் தலையீட்டில் இருந்து மத்திய வங்கி தலைவருக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது மேற்கொண்டு வரவிருக்கும் கூட்டங்களில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக இது அமையலாம். பல நாடுகளும் பணவீக்கத்தினை எதிர்த்து போராடுவதால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது.தற்போது அவுன்ஸூக்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 215 ரூபாய் குறைந்து, 50,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 560 ரூபாய் குறைந்து, 60,565 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இது குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் வெள்ளி விலையும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 4,770 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 176 ரூபாய் குறைந்து, 38,160 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 5200 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 41,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 67.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 675 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என விதமாகவே காணப்படுகின்றது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் குறைந்து தான் காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+