தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியிலும், சற்று சரிவினைக் கண்டு வருகின்றன. எனினும் இன்று காலையில் இருந்தே சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இந்தியாவில் கமாடிட்டி சந்தையானது இன்று மகாசிவராத்திரி என்பதால் விடுமுறை ஆதால், இன்று மாலை அமர்வு மட்டுமே தொடங்கவுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது பெரும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? இனி குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
பாதுகாப்பு புகலிடம்
தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றமானது 6வது நாளாகவும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா இன்னும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது மேற்கொண்டு பதற்றம் அதிகரிக்கலாமோ என்ற நிலை இருந்து வருகின்றது. ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
பேச்சு வார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், அதுவும் தோல்வியில் முடிந்ததாகவே தெரிகிறது. ஒரு புறம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க, மறுபுறம் நிறுத்தி வைத்திருந்த தாக்குதலை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தரைவழி, வான் வழி, நீர்வழி என மூன்று பக்கங்களில் இருந்தும் தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகின்றது.
பணவீக்கம்
இப்படி பல காரணங்களுக்கும் மத்தியில் பல நாடுகளும் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்து வருகின்றன. சில நாடுகள் கனடா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்துள்ளன. இதனால் இவை மற்ற நாடுகளை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் பணவீக்கம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள் சரிவு
தொடர்ந்து பல நாடுகளின் பங்கு சந்தைகளும் வீழ்ச்சியினை பதிவு செய்து வருகின்றன. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கத்திற்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் வரும் வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.
முக்கிய லெவல்
தங்கத்தின் அடுத்த முக்கிய லெவலாக 1975 டாலர்களாக உள்ளது. இதனை உடைத்தால் 1997 டாலர்களையும், 2000 டாலர்களையும் உடைக்கலாம். அதேசமயம் தங்கம் விலையும் 1869 டாலர் முக்கிய சப்போர்ட் ஆக இருக்கும். இதனை உடைத்துக் காட்டினால் 1845 டாலராகவும் உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 8.65 டாலர்கள் அதிகரித்து, 1908.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் குறைந்து பின்னர் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% அதிகரித்து, 24.527 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்றே ஏற்றத்தினை கண்டு காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4,788 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 38,304 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5,223 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 41,784 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,230 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 700 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 70,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்த வரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!



Click it and Unblock the Notifications