தங்கம் விலை மீண்டும் சரிவு.. வெள்ளி விலையும் சரிவு.. இது மீண்டும் குறையுமா.. இன்று வாங்கலாமா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டதையடுத்து இன்று எப்படியிருக்கும், மீண்டும் ஏற்றம் காணுமா? அல்லது சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்?

நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறினாலும், மீடியம் டெர்மில் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

சிலிண்டர் விலை உயர்வு.. தீபாவளிக்கு முன் மிகப்பெரிய அறிவிப்பு..! சிலிண்டர் விலை உயர்வு.. தீபாவளிக்கு முன் மிகப்பெரிய அறிவிப்பு..!

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இது மீடியம் டெர்மில் குறையுமா அல்லது அதிகரிக்குமா? நீண்ட கால நோக்கில் என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தந்தேராஸ் எதிர்பார்ப்பு

தந்தேராஸ் எதிர்பார்ப்பு

பொதுவாக இந்தியாவினை பொறுத்தவரையில் இன்றளவிலும் பாராம்பரியம், பழமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் தீபாவளிக்கு இரு நாட்கள் முன்னதாக கொண்டாடப்படும் விழாதான் தந்தேராஸ். நடப்பு ஆண்டு நவம்பர் 2 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் தங்க நகைகள், நாணயம், தங்க கட்டிகள் வாங்குவது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தீபாவளி திருநாள்

தீபாவளி திருநாள்

தந்தேராஸ்-ஐ தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படும் நிலையில், இந்த காலகட்டத்தில் நிச்சயம் பிசிகல் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில்லறை விற்பனையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்காவிட்டாலும், பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனலாம்.

பிரீமியம் விலை

பிரீமியம் விலை

முந்தைய வாரத்தில் அவுன்ஸுக்கு 1.5 டாலர்கள் தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் அவுன்ஸூக்கு 0.5 டாலர்கள் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக டீலர்கள் பிரீமிய விலையுடன் சேர்த்து, 10.75% இறக்குமதி வரி மற்றும் 3% ஜிஎஸ்டி ஆகியவற்றையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், இதுவும் தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வரவிருக்கும் நாட்களில் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளார்கள் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளனர் எனலாம். இதனால் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணாமல் காணப்படுகின்றது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

நிபுணர்கள் தங்கம் விலையானது வரவிருக்கும் வாரத்தில் அதிகரிக்கலாம் என்று கூறிவருகின்றனர். இது இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, 52,000 - 53,000 ரூபாய் வரையில் செல்லலாம் என கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 2,000 டாலர்களை தொடலாம் என கணித்துள்ளனர்.

 நோக்கிய டேட்டா

நோக்கிய டேட்டா

நடப்பு வாரத்தில் வெளியாகவிருக்கும் இந்தியாவின் உற்பத்தி குறித்தான டேட்டாக்கள், அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவுகள், சீனாவின் பிஎம்ஐ விகிதம், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் உற்பத்தி குறித்தான தரவு, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம், அமெரிக்க பத்திர சந்தை உள்ளிட்ட பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை


சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1,786.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை விலை அதிகரித்து காணப்பட்டாலும், வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.. தற்போது சற்று குறைந்து, 23.933 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு, 37 ரூபாய் அதிகரித்து, 47,672 ரூபாயாக காணப்படுகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இது கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 8,500 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 94 ரூபாய் குறைந்து, 64,440 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலை, குறைந்த விலை என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,501 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 36,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,911 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 39,288 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 49,110 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 68.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது வரவிருக்கும் டேட்டாக்களினை பொறுத்து இருக்கலாம் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 1st November 2021; gold jewellery prices down today

Gold price latest update.. Gold price on 1st November 2021; gold prices struggling, silver also drop 5th day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X