தங்கம் விலை சரிவு.. இப்போது வாங்கலாமா.. எவ்வளவு குறைந்திருக்கு.. இது சரியான நேரமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது நேற்று சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டு சற்று குறைந்துள்ளது. இதே இந்திய சந்தையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இது தங்க வர்த்தகர்களுக்கும், நகை பிரியர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு என்றாலும், இன்னும் தங்கம் விலையானது குறையுமா அல்லது அதிகரிக்குமா? எவ்வளவு குறையும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், சர்வதேச சந்தையில் தங்கம் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது நகை ஆர்வலர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. சவரனுக்கு எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க...! தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. சவரனுக்கு எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க...!

டாலர் தடுமாற்றம்

டாலர் தடுமாற்றம்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வரவிருக்கும் நிலையில், அதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் உருமாறிய கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டேட்டாவானது எப்படி வருமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

எனினும் அங்கு தற்போது உருமாறிய டெல்டா கொரோனாவின் தாக்கமானது வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக மேற்கொண்டு பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் வேலை வாய்ப்பு விகிதம் என்பது அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், இந்த நிலை இப்படியே தொடருமா? அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஆதரவளிக்கும் ரூபாய் ஏற்றம்
 

ஆதரவளிக்கும் ரூபாய் ஏற்றம்

சமீபத்திய கூட்டங்களில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க அமெரிக்கா எந்த கால அவகாசமும் கொடுக்கப்படாத நிலையில், எப்போது வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது இந்திய சந்தையில் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் தங்கம் விலை குறையலாம்

மீடியம் டெர்மில் தங்கம் விலை குறையலாம்

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக தினசரி கேண்டில் பேட்டர்ன், 5 மணி நேர கேண்டில், ஒரு மணி நேர கேண்டில் என அனைத்தும் சற்று குறையும் விதமாகவே இருப்பதால், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைவது போலவே காணப்படுகின்றது.

முக்கிய லெவலை உடைக்குமா?

முக்கிய லெவலை உடைக்குமா?

ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலேயே இருந்து வருகின்றது. இது கடந்த வாரத்தில் தொட்ட 1826.50 டாலர் உச்சத்தினை உடைத்தால் மீண்டும் ஏற்றம் காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இன்ட்ராடே வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

பிவோட் லெவலில் வர்த்தகம்

பிவோட் லெவலில் வர்த்தகம்

சர்வதேச தங்கம் விலையானது அனைத்து டெக்னிக்கல் பேட்டர்ன்களிலும், பிவோட் பாயிண்டிலேயே இருந்து வருகின்றது. இன்றைய பிவோட் பாயிண்ட் 1817.50 என்ற நிலையில் இதனை உடைத்துக் கொண்டு தொடர்ந்து மேலாகவே இருந்து வந்தால், சந்தை ஏற்றத்திற்கு திரும்பினாலும் சொல்வதற்கில்லை. எனினும் இன்று மாலை அமர்வில் அமெரிக்காவின் வேலை குறித்தான தரவானது வெளிவரவுள்ளது, இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்..

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 1 டாலர்கள் குறைந்து, 1816.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்சத்தினை உடைப்பது போலவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இந்த இடத்தில் செல்லிங் செய்வது சரியானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி தங்கம் விலையானது குறைந்தாலும், குறைவான விலையில் வாங்கலாம் என கூறுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்து விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது 0.42% குறைந்து, 23.905 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 47,139 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படும் அதே நேரத்தில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 225 ரூபாய் குறைந்து, 63,141 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் குறைந்து, 4,456 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 35,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 ரூபாய்க்கு மேலாகவே காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 11 ரூபாய் குறைந்து, 4,861 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 38,888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 68.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 68,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. ஆக வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம். எனினும் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 1st September 2021; gold price fall again today, now trade nearly Rs.47,100

Gold price latest update.. Gold price on 1st September 2021; gold price fall again today, now trade nearly Rs.47,100
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X