திடீரென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1716 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.

2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்திர அளவில் தங்கம் விலையானது, ஆகஸ்ட் மாதத்தில்
ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.

இது தொடர்ந்து 5வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இன்று கவனிகக் வேண்டிய விஷயங்கள் என்ன? முக்கிய லெவல்கள் என்ன? விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை குறைக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம்.

1 மாத சரிவில் தங்கம்

1 மாத சரிவில் தங்கம்

ஆக இனி வரவிருக்கும் மாதங்களிலும் டாலரின் மதிப்பு வலுவடைய காரணமாக இருக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். வட்டி விகிதம் மீண்டும் 4% மேலாக உயர்த்தப்படலாம் என்று அமெரிக்க மத்திய வங்கியானது சுட்டிக் காட்டியுள்ளது. ஆக இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது 1 மாத சரிவில் காணப்படுகின்றது.

தொடரும் நிகழ்வு

தொடரும் நிகழ்வு

மேலும் வட்டி விகிதமானது வரவிருக்கும் கூட்டத்தில் மட்டும் அல்ல, அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக மேலும் தங்கம் விலையானது மேலும் அழுத்தத்திலேயே இருக்கலாம். இது ஏற்றம் கண்டாலும் பெரியளவில் இருக்காது என ஒரு தரப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

ஐரோப்பிய நாடுகளிலும் வட்டி விகிதமானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஐரோப்பிய மத்திய வங்கியினையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். டாலரின் மதிப்பானது தொடர்ந்து தங்கம் விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 12.35 டாலர்கள் குறைந்து, 1715.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.62% குறைந்து, 17.593 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 289 ரூபாய் குறைந்து, 50,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கேப் டவுன் ஆகி காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் கிலோவுக்கு 961 ரூபாய் குறைந்து, 51,600 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து, 4710 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து, 37,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து, 5128 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,104 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 480 ரூபாய் குறைந்து , 51,380 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 58 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 580 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்து, 58,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,100

மும்பை - ரூ.46,500

டெல்லி - ரூ.46,700

பெங்களூர் - ரூ.46,550

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,100

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+