தங்கம் விலை சரிவா.. இது வாங்க இது சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன...!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1800 டாலர்களுக்கு அருகிலேயே இருந்து வருகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாக முடிந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1800 டாலர்களுக்கு கீழ் வர்த்தகமாகி வருகின்றது.

எனினும் இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஆக தங்கம் விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக இனி குறையுமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

உணர்வுபூர்வமாக தங்கம் விலையானது 1800 டாலர்களை உடைத்து மேலே சென்றால் தான் இன்னும் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கை முதலீட்டாளார்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போது தடுமாற்றத்தில் காணப்படுவது முதலீட்டாளர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு

சர்வதேச அளவில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவிலான பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொடலாம் என்ற நிலையில், கட்டுப்பாடுகளும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?

வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?

தற்போது அமெரிக்கா ஃபெடரல் வங்கியானது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இது குறித்து முதலீட்டாளர்கள் மிக கவனமாக கவனித்து வருகின்றனர்.

 பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

தற்போது நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பிசிகல் தங்கத்திற்கான தேவையும் வரவிருக்கும் சீசனில் அதிகரிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பொருளாதார வளர்ச்சியினை தக்க வைத்து கொள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யுமா? பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க மத்திய வங்கிகள் நடவடிக்கை எடுக்குமா? என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

டாலர், ரூபாய் மதிப்பு

டாலர், ரூபாய் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது தற்போது வலுவாக காணப்படுகின்றது. எனினும் பரவி வரும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக இது இப்படியே தொடருமா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றது. இதுவும் தொடர்ந்து தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.80 டாலர்கள் குறைந்து, 1803.10 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 1% குறைந்து, 22.352 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலை, குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 48,614 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையிலேயே, தொடக்க விலையும் உள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 364 ரூபாய் குறைந்து, 61,773 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து , 4,591 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து , 36,728 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 5,010 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 40,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு சற்று குறைந்து 65.96 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 659.60 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 40 ருபாய் குறைந்து, 65,960 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+