தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. குறைஞ்சிருக்கா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே பெரியளவில் சரிவினைக் காணவிட்டாலும், ஏற்றம் காணவில்லை என்பதே மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே 1696 - 1720 டாலர்கள் என்ற லெவலிலேயே உள்ளது. ஆக இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தால் தான் அடுத்து எப்படியிருக்கும் என்பது தெரியவரும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

எப்படியிருப்பினும் தொடர்ந்து கீழாகவும் செல்லாமல், இதே லெவலில் காணப்படும் நிலையில், குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியிருக்கலாம். இதுவே பெரியளவிலான சரிவினையும் தடுத்திருக்கலாம்.

வலுவிழந்த டாலர்

வலுவிழந்த டாலர்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்பட்ட நிலையில், தங்கம் விலையானது இன்று காலை அமர்வில் சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும் அது பின்னர் சரிவினை கண்டு காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு மத்தியில், டாலரின் மதிப்பானது சற்றே பின் தங்க தொடங்கியுள்ளது. எனினும் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

இன்று தடுமாற காரணம்?

இன்று தடுமாற காரணம்?

டாலரின் மதிப்பானது இன்று சற்று முந்தைய அமர்வுகளை காட்டிலும் சற்று வலுவிழந்து காணப்படுகின்றது. இது டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. இதுவே குறைந்த விலையில் வாங்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது இன்று பெரியளவில் குறையவும் செய்யாமல், ஏற்றம் காணவும் இல்லை.

பெரும் தலைவலியாக இருக்கும் பணவீக்கம்

பெரும் தலைவலியாக இருக்கும் பணவீக்கம்

இன்று சர்வதேச பொருளாதாரத்திற்கு பெரும் தலைவலியாக இருப்பது பணவீக்கமே. பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது முதலீடுகள் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
அதேசமயம் இந்த பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதம் மட்டும் கைகொடுக்காது என்று நிபுணர்கள் கூறி வருவது நினைவுக்கூறத்தக்கது. மேலும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்தால் அது பொருளாதார வளர்ச்சியினை தாக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

தொடர்ந்து இன்று வரையில் நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை, இதனால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம், பொருளாதார மந்தம், பணவீக்கம், கொரோனா தாக்கம், அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில் ரெசசன் அச்சமும் மேலோங்கியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

 ஃபெடரல் வங்கி கூட்டம் எப்போது?

ஃபெடரல் வங்கி கூட்டம் எப்போது?

ஜூலை 26 - 27ல் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. எனினும் எவ்வளவு வட்டி அதிகரிக்கலாம், வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் உள்ளதா என முதலீட்டாளர்கல் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

வெள்ளி நிலவரம்

வெள்ளி நிலவரம்

சீனாவில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வெள்ளியின் தேவை குறையாலமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் சீனாவின் நடவடிக்கையும் கவனித்து வரப்படுகின்றது. இது வெள்ளி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல சீன வங்கிகள் முதலீட்டாளர்கள் புதியதாக தங்கம் மற்றும் வெள்ளி ஆர்டர்களை எடுக்க தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக இது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம் என கமாடிட்டி நிபுணர்கள் கூறுகின்றனர்.

 சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1710.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று அதிகரித்து, 18.730 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்னும் சற்று அதிகரித்து பெரியளவில் மாற்றமின்றி தான் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சற்று குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, தொடக்கத்தில், 59 ரூபாய் அதிகரித்து, 50,370 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 91 ரூபாய் அதிகரித்து, 55,818 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 4667 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 37,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5069 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 40,552 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,690 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து,61 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

சென்னையில் இன்று - ரூ.46,670

மும்பை - ரூ.46,310

டெல்லி - ரூ.46,310

பெங்களூர் - 46,360

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,670

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+