இது சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை சரிவு.. இனியும் தொடருமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த சரிவினை எட்டிய நிலையில், இன்றும் சற்று சரிவினைக் கண்டிருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.

இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. எனினும் இனி விலை எப்படியிருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி.. ரூபாய் சரிவால் முதலீட்டாளர்கள் கவலை..! ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சி.. ரூபாய் சரிவால் முதலீட்டாளர்கள் கவலை..!

கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும், தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களுக்கும் மேலாக காணப்பட்டது. இதனால் தங்கம் விலையானது தொடந்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

பொறுத்திருந்து வாங்கலாம்

பொறுத்திருந்து வாங்கலாம்

ஆனால் அதனை பொய்யாக்கும் விதமாக மீண்டும் கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. ஆக இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் காத்திருக்கலாம். இதே நீண்டகால வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கினால் குறைந்த விலையில் வாங்கலாம்.

பத்திர சந்தை ஏற்றம்

பத்திர சந்தை ஏற்றம்

தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், பல்வேறு காரணிகளும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளன. இதன் காரணமாக வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வந்தது. ஆனால் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கப்படுமா? என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு
 

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு

சர்வதேச அளவில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவிலான பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொடலாம் என்ற நிலையில், கட்டுப்பாடுகளும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

சர்வதேச பங்கு சந்தைகள் கடந்த சில் தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளது.

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

மேலும் ஓமிக்ரான் காரணமாக நெதர்லாந்தில் முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ்-க்கு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொருளாதாரம் இன்னும் சரிவு பாதைக்கு செல்லலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?

வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?

தற்போது அமெரிக்கா ஃபெடரல் வங்கியானது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இது குறித்து முதலீட்டாளர்கள் மிக கவனமாக கவனித்து வருகின்றனர்.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

 

தங்கத்தின் விலையானது தற்போது நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் மீண்டும் சரிவினைக் காணலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பிசிகல் தங்கத்திற்கான தேவையும் வரவிருக்கும் சீசனில் அதிகரிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

 

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது தற்போது சற்று வலுவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் பரவி வரும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக இது இப்படியே தொடருமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.85 டாலர்கள் அதிகரித்து, 1,797.45 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் 1% மேலாக ஏற்றம் கண்டு, 22.527 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், முந்தைய அமர்வின் உச்ச விலையை உடைத்துள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 52 ரூபாய் குறைந்து , 48,188 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாக கானப்படுகின்றது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. தற்போது கிலோவுக்கு 330 ரூபாய் அதிகரித்து, 61,749 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலையை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து , 4,554 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 296 ரூபாய் குறைந்து , 36,432 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து, 4,968 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து, 39,744 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.76 ரூபாய் குறைந்து 65.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 652 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 760 ருபாய் குறைந்து, 65,200 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 21st December 2021: gold prices trade lower, breaks key support

gold price on 21st December 2021: gold prices trade lower, breaks key support/இது சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை சரிவு.. இனியும் தொடருமா?
Story first published: Tuesday, December 21, 2021, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X