கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

எனினும் இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதால் புராபிட் புக்கிங் காரணமாக விலையில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறைந்தால் எவ்வளவு குறையலாம்? இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை அடுத்த 12 - 15 மாதங்களில் எப்படியிருக்கும்.. பட்டையை கிளப்ப போகும் வெள்ளி விலை..! தங்கம் விலை அடுத்த 12 - 15 மாதங்களில் எப்படியிருக்கும்.. பட்டையை கிளப்ப போகும் வெள்ளி விலை..!

2வது வாரமாக ஏற்றம்

2வது வாரமாக ஏற்றம்

தங்கம் விலையானது இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வந்தாலும், அமெரிக்கா ரஷ்யா இடையேயான பதற்றமான போக்கு, தங்கம் விலையானது உச்சம் தொட காரணமாக அமைந்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பின் எதிரொலியால் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. இது சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையிலும் ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டது. தற்போது தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தால் வாங்கலாம்
 

குறைந்தால் வாங்கலாம்

தங்கம் விலை குறைந்தால் இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. சந்தையில் சரிவு இருந்தால் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1830 - 1814 டாலர்களாகும். இதே அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்களாக 1855 - 1870 டாலர்களாகவும் உள்ளது. இதே எம்சிஎக்ஸ் சந்தையில் அடுத்த சப்போர்ட் லெவலாக 48220 - 48055 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 48550 - 48770 ரூபாயாகும்.

பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சம், அரசியல் பதற்றம் என பலவும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க, நடவடிக்கை எடுக்க மத்திய வங்கிக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கம் மற்றும் அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்தாக தரவு, வீடு விற்பனை குறித்தான தரவுகளும் வெளியாகவுள்ளன. இதுவும் தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.

ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் ஜனவரி 25 - 26ம் தேதிகளில் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.10 டாலர்கள் குறைந்து, 1840.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. அதே நேரம் உச்ச விலை, குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.527 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. அதே நேரம் உச்ச விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எனினும் இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 48,484 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருந்தாலும், வெள்ளியின் விலை இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 79 ரூபாய் குறைந்து, 65,300 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4,594 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 36,752 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 5012 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 40096 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.50 ரூபாய் அதிகரித்து, 69.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 693 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 69,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் இந்திய சந்தையில் சற்று வலுவாகவே காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 21st January 2021: gold prices steadies in MCX and COMEX

gold price on 21st January 2021: gold prices steadies in MCX and COMEX / கிடு கிடு ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X