சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. கிட்டதட்ட 1 வருட குறைந்த விலை.. வாங்க ரெடியா?

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வந்தது. சொல்லப்போனால் கடந்த சில தினங்களாகவே 1696 - 1720 டாலர்கள் என்ற லெவலிலேயே ரேஞ்ச் பவுண்டாக இருந்தது. ஆனால் கடந்த அமர்வில் 1690 டாலர் என்ற லெவலுக்கு உடைத்து சென்றது.

இன்று இன்னும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக 1689 டாலர்கள் என்ற லெவலில் உள்ளது. இது தற்போது வரையில் 1687.65 டாலர் என்ற லெவல் வரையில் சென்றுள்ளது.

இது இன்னும் குறையலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஏனெனில் தங்கம் விலையில் குறைந்தபட்ச முக்கிய சப்போர்ட் ஆக இருந்த 1690 டாலர்களையும் உடைத்து காட்டியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

கடந்த அமர்வில் 1710 டாலர்களுக்கு மேலாக சென்ற தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளதே என்ன காரணம்? இன்றும் சரிவின் விளிம்பிலேயே காணப்படுகிறது.

தங்கம் விலையினை நிர்ணியிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைந்துள்ள நிலையில், இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

 

1 வருட சரிவில் தங்கம் விலை

1 வருட சரிவில் தங்கம் விலை

கிட்டதட்ட 1வருட சரிவில் உள்ள தங்கம் விலையானது வலுவான டாலர், வட்டி விகிதம் அதிகரிப்பு,பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளால் தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தங்கம் விலையானது 1691.40 என்ற லெவலில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பணவீக்கம் என்பது எதிர்பாராத அளவு அதிகரித்து வரும் நிலையில், கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தியுள்ளது.

 

காஸ்ட்லியான தங்கம்

காஸ்ட்லியான தங்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பால், டாலரின் மதிப்பில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு இது விலை உயர்ந்ததாக மாற்றலாம். இதனால தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்ததினை ஏற்படுத்தியுள்ளது. டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் எட்டியுள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய நடவடிக்கை

11 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய நடவடிக்கை

ஐரோப்பிய மத்திய வங்கியும் 11 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களின் வாங்கும் திறனை குறைக்கலாம் என்றும், இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து நிலவரம்

இங்கிலாந்து நிலவரம்

இங்கிலாந்தில் ஏற்கனவே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கமானது உச்சத்தில் உள்ளது. ஆக அங்கும் வட்டிவிகிதம் அதிகரிக்கலாம் என்றும், இது அடுத்த மாதம் வரவிருக்கும் கூட்டத்தில் குறைந்தபட்சம் அரை சதவீதமாவது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு மத்தியில், பணவீக்கம் என்பது மிகப்பெரியளவில் அதிகரித்து காணப்படுகிறது. பல நாடுகளும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், பணவீக்கம் கட்டுக்குள் வர இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்க இது நீண்டகால நோக்கிலல் காரணமாக அமையலாம்.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

தொடர்ந்து இன்று வரையில் நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை, இதனால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம், கொரோனா தாக்கம், அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளுக்கு மத்தியில் ரெசசன் அச்சமும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு, 10.92 டாலர்கள் குறைந்து, 1689.15 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% குறைந்து, 18.485 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ள நிலையில், இது மேற்கொண்டு சற்று குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, தொடக்கத்தில், 231 ரூபாய் குறைந்து, 49,994 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 469 ரூபாய் குறைந்து, 55,150 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே குறையலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 4630 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 37,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை


இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 5032 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 40,240 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 61 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,300

மும்பை - ரூ.46,310

டெல்லி - ரூ.46,310

பெங்களூர் - 46,360

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,300

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+