ரூ.8,700 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையுமா..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் இன்று சர்வதேச சந்தையில் சற்றே குறைந்து காணப்படுகிறது. இது இன்னும் குறையுமா?

இந்திய சந்தையில் என்ன நிலவரம் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இது மீடியம் டெர்மில் குறையுமா அல்லது அதிகரிக்குமா? நீண்ட கால நோக்கில் என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரிக்கும் பத்திர சந்தை

தொடர்ந்து அதிகரிக்கும் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது டாலரின் மதிப்பில் ஊக்கத்தை அளித்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து வலுவாக இருந்து வரும் டாலரின் மதிப்பானது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணும் விதமாகவே இருந்து வருகிறது. எப்படி இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

அமெரிக்காவின் வேலையில்லாதோர் நலன் குறித்த குறியீடு மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உரை உள்ளிட்ட பல முக்கிய காரணிகள் வரவிருக்கும் நாட்களில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், தங்க விலையானது வரும் நாட்களிலும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது தங்கத்தின் விலையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் வலுவாக காணப்படுகின்றது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

சர்வதேச அளவில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, குறைந்த வட்டி விகிதம், பத்திர சந்தை ஏற்றம் என பல முக்கிய காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் ஆனது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது வாங்க சரியான இடமா?

இது வாங்க சரியான இடமா?

தங்கம் விலை சரியும் பட்சத்தில், குறைந்த விலையில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல் வெள்ளியும் நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1,784.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலையை உடைத்துள்ளது. ஆக சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலமான ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், எனினும் நேற்றைய உச்ச விலையை உடைத்துள்ளது. தற்போது சற்று அதிகரித்து, 24.523 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று அதிகரித்து, 47,522 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இது கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 8,700 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 143 ரூபாய் அதிகரித்து, 65,794 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து, 4,484 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 35,872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 11 ரூபாய் அதிகரித்து, 4,892 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 39,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 48,920 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 1.50 பைசா அதிகரித்து, 70.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1500 ரூபாய் அதிகரித்து, 70,200 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களாக வெள்ளியின் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது வரவிருக்கும் டேட்டாக்களினை பொறுத்து இருக்கலாம் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+