ரூ.10,000-க்கு மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே சரிவில் காணப்பட்ட நிலையில், கடந்த அமர்வில் மீண்டும் ஏற்றத்தினை கண்டது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. இது இன்னும் விலை குறையுமா? இனி எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவில் கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டமாக பார்க்கப்படும் தங்கமானது, வர்த்தகர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

இது விலை இன்னும் குறையுமா? அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய லெவல்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே பலத்த சரிவினைக் கண்ட நிலையில், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. சொல்லப்போனால் நேற்று 1742.50 டாலர்கள் வரையில் சென்ற தங்கம் விலையானது, முடிவில் 1763.80 டாலர்களாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் இன்று தங்கம் விலையானது இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

6 மாத சரிவில் தங்கம் விலை

6 மாத சரிவில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது 6 மாத குறைந்த விலையினை தொட்டுள்ளது. கடந்த அமர்வில் 10 கிராமுக்கு 45,900 ரூபாயினை தொட்டது. இது வலுவான டாலருக்கு மத்தியில் சரிவினைக் கண்டது. இது இன்னும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

வலுவான டாலர் மதிப்பினால் தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், மறுபுறம் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தங்கத்திற்கான முதலீட்டு தேவையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் பதற்றம்

ஆப்கானிஸ்தான் பதற்றம்

நிபுணர்கள் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பதற்றம் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பதற்றமானது தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா காரணமாக, இதுவும் நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்


தங்கம் விலைய்யானது 52,000 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது தங்கம் விலையானது குறைவாகவே உள்ளது. ஆக இது முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதோடு தங்கம் விலையானது குறைவாக உள்ள நிலையில், இது வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

வரவிருக்கும் திருமண முகூர்த்தங்கள், விழாக்கால பருவம் என்பது தங்கத்தின் தேவையை ஊக்குவிக்கலாம். ரஷ்யா, சீனா மற்றும் பிற வங்கிகள் கூட தங்களது இருப்பில் தங்கத்தினை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் தங்கத்தின் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க இது வாய்ப்பாக அமையும்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தற்போது தங்கம் விலையானது சந்தையில் 1700 - 1790 டாலர்களுக்குள் வர்த்தகமாகி வருகின்றது. இதனை உடைத்து 1850 டாலர்களை உடைத்தால் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம். அதன் பிறகு மீடியம் டெர்மில் 1900 டாலர்களை உடைக்கலாம். இதே இந்திய சந்தையில் 52,000 ரூபாயினை தொடலாம் என்ற நிலையே இந்து வருகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 1763.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தான் தொடங்கியுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 22.315 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து, 46,220 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 10,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 141 ரூபாய் அதிகரித்து, 59,750 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 14 ரூபாய் அதிகரித்து, 4,374 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 34,992 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 35,000 ரூபாய்க்கு கீழாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,772 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 38,176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, 63.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 63,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே சரிவினைக் கண்டு வரும் வெள்ளி விலையானது, இன்றும் குறைந்துள்ளது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியினை நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதே சமயம் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+