நகை வாங்க இது தான் சரியான நேரம்.. தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதனால் அடுத்து தங்கம் விலை எப்படியிருக்கும். நிபுணர்கள் சொன்னது போல மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விடுமோ? என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து மூன்று அமர்வுகளாக சற்றே சரிவில் தான் காணப்படுகின்றது. இன்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இன்றும் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா?

இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமா? இனி விலை எப்படியிருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல் என்ன? என பல கேள்விகள் எழுகின்றன.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் என்பது வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே நெதர்லாந்தில் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலும் இனி கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதே இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள ஓமிக்ரான் காரணமாக இரவு நேர கட்டுபாடுகளை அதிகரிக்கலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.ஆக இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏன் இந்த சரிவு?

ஏன் இந்த சரிவு?

இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்காவி; 2022க்குள் வட்டி விகிதம் 3 முறை அதிகரிக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன.

பங்கு சந்தை வீழ்ச்சி

பங்கு சந்தை வீழ்ச்சி

சமீபத்திய தினங்களாகவே சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக ஒமிக்ரான் காரணமாக அன்னிய சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது நடப்பு காலாண்டில் இதுவரையில் 2.2% வீழ்ச்சி கண்டுள்ளது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1,788.85 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து 22.543 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கல் ப்வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 57 ரூபாய் குறைந்து, 48,010 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை


தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. தற்போது கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 61,825 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலையை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து , 4,537 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 136 ரூபாய் குறைந்து , 36,296 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,950 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 39,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.60 ரூபாய் அதிகரித்து, 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ருபாய் அதிகரித்து, 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளது. இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 22nd December 2021: gold jewellery prices fall in third day

gold price on 22nd December 2021: gold jewellery prices fall in third day/நகை வாங்க இது தான் சரியான நேரம்.. தங்கம் விலை எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X