தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே சற்று சரிவில் இருந்த நிலையில், கடந்த அமர்வில் மீண்டும் அவுன்ஸூக்கு 1700 டாலர்களை உடைத்து ஏற்றம் கண்டுள்ளது.
இன்றும் 1700 டாலர்களுக்கு மேலாக இன்னும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது தினசரி கேண்டில் பேட்டர்னிலும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தடுமாற்றம் ஏன்?
தங்கம் விலையானது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. சொல்லப்போனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்பட்டுகின்றது. எனினும் பெரியளவில் குறையவில்லை.இது தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற கருத்துக்கு மத்தியில் விலை, டாலர் மதிப்பானது ஏற்றம் கண்டு வருகின்றது.
ஐரோப்பிய மத்திய வங்கி
ஐரோப்பிய மத்திய வங்கியானது பல வருடங்களுக்கு பிறகு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகம்
டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், டாலரில் வாங்குபவர்களுக்கு தங்கம் விலை உயர்ந்ததாகவே உள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலை வாங்க தூண்டலாம்
தங்கம் விலையானது கிட்டதட்ட 1 வருட சரிவினை எட்டிய நிலையில், இது பலரையும் குறைந்த விலையில் வாங்க தூண்டியிருக்கலாம். இதுவே தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் இருக்க காரணமாகவும் இருக்கலாம்.
சிறந்த ஹெட்ஜிங்
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சர்வதேச அளவில் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு வழிவகுக்கலாம். பல நாடுகளும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடலாம். ஆனால் வட்ட்கியயி அதிகரித்தாலும் உடனடியாக பணவீக்கம் கட்டுக்குள் வர இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.
முதலீட்டாளர்கள் கவனம்
வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எவ்வளவு அதிகரிக்கலாம் என்பது குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்தில் முதலீடுகளை செய்ய தூண்டலாம. அதுவரையில் முதலீட்டாளர்கள் குறைவாகவோ அல்லது முதலீட்டினை செய்யாமலேயே காத்திருக்கின்றனர் எனலாம்.
3 வாரமாக வேலையின்மை நலன் அதிகரிப்பு
இதற்கிடையில் தொடர்ந்து வேலையின்மை நலனுக்கான பதிவு விகிதமானது தொடர்ந்து மூன்றாவது வாரமாக அதிகரித்துள்ளது. இது பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதையே காட்டுகின்றது. தொழில் நடவடிக்கைகள் மந்த நிலையில் உள்ளதையே இதன் மூலம் அறிய முடிகிறது. வட்டி விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில் இது என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1712.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து, 18.663 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே குறைந்திருந்தாலும், பெரியளவில் மாற்றம் காணவில்லை, தங்கம் விலை டெக்னிக்கலாக குறைந்திருந்தாலும், சற்று ஏற்றம் காணலாம் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று குறைந்து, 50,365 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 139 ரூபாய் குறைந்து, 55,272 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 4666 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 37,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 5090 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 40,720 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 61.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 616 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 61,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.46,660
மும்பை - ரூ.46,400
டெல்லி - ரூ.46,400
பெங்களூர் - 46,450
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,660
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications