தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. குறையுமா.. இப்போது வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து சற்று ஏற்றத்தில் இருந்து வருகிறது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே இருந்து வருகிறது

எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு டாலரின் மதிப்பானது, சற்றே வளர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றம் கண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் டாலரின் மதிப்பு சற்றே வலுவிழந்து காணப்படுகிறது. இதற்கிடையில் நீண்டகால நோக்கில் இது மீண்டும் தங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனலாம். தற்போது தான் இரண்டாம் கட்ட பரவலில் இருந்து மெல்ல மெல்ல பொருளாதாரமானது வளர்ச்சிக்கான தொடங்கியுள்ள நிலையில், தற்போது மூன்றாம் கட்ட அலையின் அச்சம் நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரித்தால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதற்கிடையில்தான் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

பல்வேறு காரணிகள் சந்தைக்கு எதிராக இருப்பினும் தற்போது நுகர்வோர் விலை குறித்தான குறியீடானது, சமீபத்தில் சந்தைக்கு சாதகமாக வந்தது. இது கொரோனா காலகட்டத்தில் இந்த அளவுக்கு ஏற்றத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அமெரிக்க பத்திரத்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்தின் ஊக்குவிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும், தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்று இருந்து வருகின்றது. இது தங்கத்தின் விலையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் வலுவாக காணப்படுகின்றது.

வாங்க சரியான இடமா?

வாங்க சரியான இடமா?

தங்கம் விலை சரியும் பட்சத்தில், குறைந்த விலையில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல் வெள்ளியும் நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1,787.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலையை உடைத்துள்ளது. ஆக சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலமான ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், எனினும் நேற்றைய உச்ச விலையை உடைத்துள்ளது. தற்போது சற்று அதிகரித்து, 24.240 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று அதிகரித்து, 47,552 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இது கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 8,600 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 187 ரூபாய் அதிகரித்து, 65,194 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 4,484 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4,892 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 48,920 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 70 பைசா குறைந்து, 69.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 69,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களாக வெள்ளியின் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும்போது வாங்கினால், இன்னும் லாபகரமானதாக இருக்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+