தங்கம் விலையானது கடந்த இரண்டு அமர்வுகளாகவே சற்று ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும், சரிவினையும் காணவில்லை.
இது இன்னும் விலை குறையுமா? இன்று விலை எப்படியிருக்கும்? இன்று வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?
இந்தியாவில் சிறந்த முதலீட்டு திட்டமாக பார்க்கப்படும் தங்கமானது, வர்த்தகர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டது. இதற்கிடையில் தற்போதைய நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்று தங்கம் விலை என்னவாகும்?
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் தொடர்ந்து அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வருகின்றது. அதே சமயம் நிபுணர்கள் 1740 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு சரியலாம் என்று கூறிய நிலையில், 1742.50 டாலர்கள் வரையில் சென்று திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலையானது வரும் வாரத்தில் சற்று அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சரிவில் தங்கம் விலை
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது 6 மாத குறைந்த விலையினை தொட்டுள்ளது. 10 கிராமுக்கு 45,900 ரூபாயினை தொட்ட நிலையில், தற்போது சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது இன்னும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 9,500 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம்
இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக முதலீட்டாளர்கள் இதனை கண்கானித்து வருகின்றனர். இது தவிர ECB வங்கி கூட்டத்தினையும் தங்கம் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். இதற்கிடையில் சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் கடன் நெருக்கடியால் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.
டாலர் நிலவரம் என்ன
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்திருந்தாலும், இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வருமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம்
இன்றுடன் முடிவடையவுள்ள ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையில், பத்திரம் வாங்குதல் பற்றிய அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணாமல் உள்ளது. எனினும் இன்று மாலை அமர்வில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த ஹெட்ஜிங்
தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடமாக உள்ள நிலையில், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் பற்றிய அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் என்ற நிலையில், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
விழாக்கால பருவம், வரவிருக்கும் திருமண முகூர்த்தங்கள் தங்கத்தின் தேவையை அதிகரிக்கலாம். இது விலையை மேற்கொண்டு ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யா, சீனா மற்றும் பிற வங்கிகள் தங்களது இருப்பில் தங்கத்தினை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் முதலீட்டு ரீதியாகவும் தங்கத்தின் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்றும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1779.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த அமர்வில் ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்சத்தினை உடைத்துக் காட்டியுள்ளது. இது தற்போது சற்று அதிகரித்து, 22.817 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம்
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 46,688 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 9,500 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 620 ரூபாய் அதிகரித்து, 61,059 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 36 ரூபாய் அதிகரித்து, 4,410 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 228 ரூபாய் அதிகரித்து, 35,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மீண்டும் இன்று 35,000 ரூபாய்க்கு மேலாக காணப்படுகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 39 ரூபாய் அதிகரித்து, 4,811 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, 38,488 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 1.30 பைசா அதிகரித்து, 65.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,300 ரூபாய் அதிகரித்து, 65,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.
இன்று என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில் இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இன்று மாலை அமர்வில் வரவிருக்கும் டேட்டாவினை பொறுத்து விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications