தங்கம் விலையானது இன்று அதன் முக்கிய லெவலான 1800 டாலர்களை தாண்டி வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
தங்கத்தின் தேவையானது புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நேரத்தில் அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஓமிக்ரான் அச்சம் மக்களை மீண்டும் பயமுறுத்த தொடங்கியுள்ள நிலையில், அத்தியாவசியம் தவிர மற்றவற்றில் முதலீட்டாளார்கள் கவனம் செலுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்படியிருப்பினும் முதலீட்டு ரீதியாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில தினங்களாக சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில் தங்கம் சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் குறித்த அச்சம்
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளிலும் பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதத்தினை விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இது இன்னும் சற்று தாமதமாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் இருக்குமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பத்திர சந்தை ஏற்றம்
அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய நடவடிக்கைகளுக்கு மத்தியில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா? என்ற சந்தேகம் ஒரு புறம் இருந்து வருகின்றது. எனினும் மறுபுறம் அமெரிக்க பத்திர சந்தையானது கடந்த சில தினங்களாகவே ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் சமீபத்திய தினங்களாக முதலீடு குறைந்தது.
ஓமிக்ரான் குறித்த அச்சம்
சர்வதேச அளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தாக்கம் என்பது வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே சில நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சி காணுமோ?
தொடர்ந்து ஓமிக்ரான் அச்சம் சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் அலையை போன்று, முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் சரிவு
தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது நடப்பு காலாண்டில் இதுவரையில் 2.2% வீழ்ச்சி கண்டுள்ளது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது வரவிருக்கும் மாதங்களில் 78 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு 5.65 டாலர் அதிகரித்து, 1,807.75 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது.தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து 22.902 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து, 48,290 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, உச்ச விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 267 ரூபாய் அதிகரித்து, 62,458 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் வெள்ளி விலையும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 4,556 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 36,448 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 4,970 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 39,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.40 பைசா அதிகரித்து, 66.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 662 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ருபாய் அதிகரித்து, 66,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில், மீடியம் டெர்மில் என இரு நிலைகளிலும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் விலையும் அதிகரித்து தான் காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications