இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாகவே தொடர்ந்து அவ்வப்போது தடுமாற்றத்தினை கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வந்தது. விலை குறையவே குறையாதா? இனி மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதா? என்ற பல கேள்விகள் எழுந்தன.

இதற்கிடையில் தற்போதைய சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

அதிகரிக்கும் பதற்றம்

அதிகரிக்கும் பதற்றம்

தங்கம் விலையை ஊக்கப்படுத்தும் விதமாக ரஷ்யா -உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.ஒரு புறம் எந்த நேரத்திலும் போர் வரலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பல நாடுகளின் தலைவர்களும்ரஷ்யாவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்ந்து முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 உக்ரைனுக்குள் நுழையலாம்

உக்ரைனுக்குள் நுழையலாம்

ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்யவின் 5 முக்கிய வங்கிகள், பெரும் வணிகர்கள் சிலர் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகாங்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித் தனி நாடுகளாக அங்கீகரிப்பதாகவும் புடின் அறிவித்த பகுதிகள் மீதும் பொருளாதார தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினை தொடர்ந்து பிரிட்டனும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இன்னும் சில நாடுகளும் ரஷ்யா மீது தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பொருளாதார தடையால் பிரச்சனை

பொருளாதார தடையால் பிரச்சனை

இதனை தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையில் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளும் ரஷ்ய வங்கிகள் மற்றும் வணிகர்கள் மீது தடை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏன் சரிவு?

ஏன் சரிவு?

இப்படி பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றதே என்ன காரணம்? கடந்த சில சந்தை அமர்வுகளாகவே பத்திர சந்தையானது சற்று தடுமாறி வந்த நிலையில், முதலீடுகள் வெளியேறி பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் அதிகரித்தன. ஆனால் தற்போது மீண்டும் பத்திர சந்தையானது ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

எப்படியிருப்பினும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, புராபிட் புக்கிங் காரணமாகவும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் முதலீட்டு ரீதியாக தங்கத்திற்கு அதிக தேவை இருப்பதால் இது அதிகரிக்கவே செய்யும். ஆக தங்கம் விலையானது குறையும் போது வாங்கி வைக்கலாம்.

 காமெக்ஸ்  தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 10 டாலர்கள் குறைந்து, 1897.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. கடந்த 2 அமர்வுகளின் கேண்டில்களின் உச்ச விலை, குறைந்தபட்ச விலை ஒரே விலையாக உள்ளது. அதாவது டபுள் பாட்டம், டபுள் டாப் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக மேற்கொண்டு எந்த லெவலை உடைக்கிறதோ அதனை பொருத்தே மீடியம் டெர்மில் இருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் எந்த அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.

 காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கத்தினை போஅல்வே வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% குறைந்து, 24.117 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 219 ரூபாய் குறைந்து, 50,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையினை உடைக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 368 ரூபாய் குறைந்து, 63,977 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4,735 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து, 5,166 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 41,328 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் பெரியளவில் குறையவில்லை. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 69 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 690 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 69,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் இன்ரு சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+