மீண்டும் தாறுமாறான ஏற்றம்.. முதல் நாளே பெருத்த ஏமாற்றம் கொடுத்த தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் (gold ) விலையானது இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

என்ன காரணம் இந்த ஏற்றமானது இனியும் தொடருமா? அடுத்து என்ன செய்யலாம்? இனி குறையவே குறையாதா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து 4 வார சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. வரும் வாரத்திலும் குறையுமா? தொடர்ந்து 4 வார சரிவுக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. வரும் வாரத்திலும் குறையுமா?

டாலர் மதிப்பு சரிவு

டாலர் மதிப்பு சரிவு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக டாலர் மதிப்பு சரிவில் காணப்படுகிறது. இது இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி குறித்து எதிர்பார்ப்பு

வட்டி குறித்து எதிர்பார்ப்பு

வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சீனாவும் லாக்டவுனில் ஏற்கனவே தளர்வுகள் அளிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு தேவைகளை அதிகரிக்க தூண்டலாம். மேலும் பலவீனமான டாலரின் மதிப்பானது மேற்கொண்டு தங்கத்தினை வாங்க தூண்டலாம்.

பத்திர சந்தை
 

பத்திர சந்தை

எப்படியிருப்பினும் பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமான காரணிகள் இருந்தாலும், அதிகரித்து வரும் பத்திர சந்தை, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்கலாம். மேலும் நடப்பு ஆண்டில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை 3.5% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர காரணமாக அமையலாம்.

 பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

தொடர்ந்து சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் இது பங்கு சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். ஆக மொத்தத்தில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 10.07 டாலர்கள் அதிகரித்து, 1852.13 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையினையும் உடைத்துள்ளது. இது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.24% அதிகரித்து, 21.942 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 99 ரூபாய் அதிகரித்து, 50,930 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 368 ரூபாய் அதிகரித்து, 61,775 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வில் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 14 ரூபாய் அதிகரித்து, 4831 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 38,648 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 5270 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 42,160 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 65.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 659 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 23rd may 2022: gold prices trade above 1 week high as US dollar weak

Today, the first trading day of the week, the price of gold continues to rise amid various factors. It looks like it could continue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X