சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா!

தங்கம் என்பது நம் உணர்வுகளில் கலந்த ஒரு உணர்வு பூர்வமான, விருப்பமான, ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.

இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படும் நிலையில், இன்றைய காலத்தில் தங்க நாணயம், தங்க பத்திரங்கள், தங்க ஃபண்டுகள், கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு என் பலவாறு செய்யப்படுகிறது.

இப்படி தங்கத்திற்கான தேவை என்பது பிசிகலாக மட்டும் அல்லாமல், முதலீட்டு ரீதியாகவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அவ்வப்போது குறைந்தாலும். தொடர்ந்து ஏற்றம் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று காலை அமர்வில் பலத்த ஏற்றம் கண்ட பிறகு மாலை அமர்வில் மீண்டும் சரிவை நோக்கி முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்படுகிறது. இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

வலுவடையும் டாலர்

வலுவடையும் டாலர்

தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு வலுவடைந்த நிலையில், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என்ற நிலையில், பத்திரம் வாங்குதலையும் குறைக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக நவம்பர் மாதத்திலிருந்து இது குறைக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

இந்த நிலையில் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது பலத்த சரிவைக் கண்டுள்ளது. எனினும் நிபுணர்கள் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் என்பதால், நீண்டகால நோக்கில் வாங்கலாம் என கருதுகின்றனர்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து டாலரின் மதிப்பு அதிகரிப்பு, பங்கு சந்தை ஏற்றம், பத்திர சந்தை ஏற்றம் என இவையாவும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், தங்கம் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்தாலும், நீண்டகால வர்த்தகர்கள் தங்கத்தை வாங்கி வைக்கலாம்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது தற்போது 1764 டாலர் என்ற நிலையில் உள்ளது. இது 1740 வரையில் செல்லலாம், அபப்டி செல்லும் பட்சத்தில் அதனையும் உடைத்தால், தங்கம் செல்லிங் லெவலுக்கு போய்விடும் என கருதுகின்றனர். எனினும் சமீபத்திய தினங்களாக 1760 என்ற லெவலியே காணப்படுகின்றது.

பலத்த வீழ்ச்சி

பலத்த வீழ்ச்சி

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்ச விலையான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும் போது, 9,800 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். வெள்ளியின் விலையும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

வரவிருக்கும் திருமண முகூர்த்தங்கள், விழாக்கால பருவம் என்பது தங்கத்தின் தேவையை ஊக்குவிக்கலாம். முதலீட்டு ரீதியாகவும் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். மேலும் தங்கத்தின் குறைந்த விலையும் முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க இது வாய்ப்பாக அமையும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று ஏற்றம் கண்ட நிலையில், இன்று மீண்டும் சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 14.35 டாலர்கள் குறைந்து, 1764.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போல, வெள்ளி விலையும் 1% மேலாக சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது தற்போது 1% குறைந்து, 22.677 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 342 ரூபாய் குறைந்து, 46,331 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 9,800 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 547 ரூபாய் குறைந்து, 60,649 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,388 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 35,104 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 35,000 ரூபாய்க்கு மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 24 ரூபாய் குறைந்து, 4,787 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து, 38,296 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 64.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 64,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த அமர்வில் பலமான ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக தங்கம் மற்றும் வெள்ளியினை நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்பட்டாலும். மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதே சமயம் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+