தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு பாருங்க..!

தங்கம் விலையானது இன்று அதன் முக்கிய லெவலான 1800 டாலர்களை தாண்டி தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே வர்த்தகமாகி வந்த நிலையில், தற்போது அதனை உடைத்து மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

உண்மையில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் மிஸ் செய்துவிட்டோமோ என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேவை அதிகரிக்குமா?

தேவை அதிகரிக்குமா?

தங்கத்தின் தேவையானது புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நேரத்தில் அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஓமிக்ரானின் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் தேவையானது மீண்டும் அதிகரிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட்டை உடைக்குமா?

முக்கிய சப்போர்ட்டை உடைக்குமா?

தங்கம் விலையானது தற்போது 1810 டாலர்கள் என்ற நிலையில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு 1814 டாலர்களை உடைத்து மேலே தொடர்ந்தால், இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த சில தினங்களாகவே பங்கு சந்தைகளானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில தினங்களாக வலுவான ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பத்திர சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

அமெரிக்காவின் வேலையின்மை நலன் சாதகமான தரவு, அமெரிக்காவின் நீடித்த பொருட்கள் ஆர்டர்கள் குறித்தான தரவு என பலவும் சந்தைக்கு சாதகமான வந்து கொண்டுள்ளது. இது எல்லாம் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டி காட்டுகின்றது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளிலும் பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதத்தினை விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இது இன்னும் சற்று தாமதமாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றம் இருக்குமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஓமிக்ரான் குறித்த அச்சம்

ஓமிக்ரான் குறித்த அச்சம்

எப்படியிருப்பினும் மேற்கண்ட அனைத்து காரணிகளையும் விட ஓமிக்ரான் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது சர்வதேச அளவில் பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனி வரும் வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே சில நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தங்கத்தின் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

தொடர்ந்து ஓமிக்ரான் அச்சம் சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் அலையை போன்று, முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்னவாகும். பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் தற்போது தான் மேம்படத் தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகள் தற்போதும் கூட இன்னும் முழுவதும் மீண்டு வரவில்லை. இப்படி பல காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை

விடுமுறை

இன்று சர்வதேச சந்தைகள் பலவும் விடுமுறையாகும். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஆக இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 48,163 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் இது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுள்ளது. தற்போது கிலோவுக்கு 57 ரூபாய் குறைந்து, 62,254 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

 

ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4546 ரூபாயாகவும், இதே இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 36,368 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4,970 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 39,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் இதுவரையில் மாற்றமில்லை. இது தற்போது கிராமுக்கு 66.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 662 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

 

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் சர்வதேச சந்தைகள் விடுமுறை ஆதலால், மீடியம் டெர்மில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+