சாமானியர்களை யோசிக்க வைக்கும் தங்கம் விலை.. மீண்டும் குறையுமா.. வாங்கலாமா?

கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் மிஸ் செய்துவிட்டோமோ என்று என்னும் அளவுக்கு, தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டது. இது நடப்பு வாரத்திலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை எவ்வளவு? சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

இந்த இடத்தில் வாங்காலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்தடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரஷ்யா பதற்றம்

ரஷ்யா பதற்றம்

அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் உச்சம் தொட்டது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தர். ரஷ்யா மேலும் உக்ரைனுக்குள் நுழைந்தால், பொருளாதார தடையை விதிப்பேன் என்றும் அப்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பதற்றத்தினை அதிகரித்துள்ளது. ஒருவேளை பிரச்சனை பெரியதாக மாறினால், இது சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

அமெரிக்காவின் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் அமெரிக்காவின் மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மட்டும் அல்ல, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் பணவீக்க விகிதமும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

கடந்த சில தினங்களாகவே பங்கு சந்தைகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் அல்லது தங்க இடிஎஃப்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம். எப்படியிருப்பினும் அமெரிக்காவின் பத்திர சந்தையில் உள்ள தொடர் ஏற்றமானது, தங்கம் விலையில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைக் காணலாம்.

வட்டி விகிதம் நடவடிக்கை

வட்டி விகிதம் நடவடிக்கை

பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க அமெரிக்க மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகித நடவடிக்கையினை எடுக்கலாம். பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் ஜனவரி 25 - 26ம் தேதிகளில் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூ.7800 சரிவில் தங்கம்

ரூ.7800 சரிவில் தங்கம்

தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 7,800 ரூபாய்க்கும் மேலாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் 48,400 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் கடந்த ஆண்டின் உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 6.45 டாலர்கள் அதிகரித்து, 1838.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.212 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. அதே நேரம் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 48,417 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை இதுவரை உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரித்திருந்தாலும், கடந்த வார உச்சத்தினை உடைத்த பின்னர் வாங்கலாம்.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று அதிகரித்து இருந்தாலும், வெள்ளியின் விலை இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 131 ரூபாய் குறைந்து, 64,675 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து, 4,587 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,696 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு சற்று குறைந்து 5004 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40032 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று தற்போது மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 69 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 690 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 69,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது வலுவாக காணப்பட்டாலும், வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் விலையானது சர்வதேச சந்தையினை போலவே காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+