ரூ.10,100 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்கள் கணிப்பு!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவை கண்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இன்றி சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

எனினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது சற்றே சரிந்து காணப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலையும் சற்று சரிந்து காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மீண்டும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் விலை சரியலாம்

தங்கம் விலை சரியலாம்

இது டாலரின் மதிப்பு ஏற்றம் உள்ளிட்ட பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தையானது சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் 1% சரிவினைக் கண்ட நிலையில், இன்று டாலரின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இதனால் தங்க, விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

விரைவில் பத்திரம் வாங்குதலை குறைக்கலாம்

விரைவில் பத்திரம் வாங்குதலை குறைக்கலாம்

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி பத்திரம் வாங்குதலை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது நவம்பர் மாதம் முதலே அமலுக்கு வரலாம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி விகிதமும் தற்போதைக்கு குறைக்கப்படவில்லை என்றாலும், விரைவில் வட்டி விகிதமும் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

உருமாறிய கொரோனா தாக்கம்

உருமாறிய கொரோனா தாக்கம்

தற்போது அமெரிக்காவில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், அது சந்தைக்கு எதிரான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் எதிர்பார்ப்பினை விட பொருளாதாரம் மேம்பட்டு வரும் நிலையில், வட்டி விகிதம் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக நீண்டகால நோக்கில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு இது சாதகமாக அமையலாம்.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக பார்க்கும் போது தங்கத்தின் விலையானது, தற்போது சற்றே ஏற்றம் கண்டிருந்தாலும், மீண்டும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் பார்க்கும்போது வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது எனலாம்.

முக்கிய டேட்டா

முக்கிய டேட்டா

கடந்த வாரமே அமெரிக்காவின் வேலையில்லாதோர் நலன் குறித்த குறியீடானது எதிர்பாராதவிதமாக அதிகரித்தது. இது இன்று எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளார்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆக முதலீட்டாளார்கள் இன்று வெளியாகவிருக்கும் டேட்டாவினை கவனித்து வருகின்றனர்.

ஜெரோம் பவல் கருத்து?

ஜெரோம் பவல் கருத்து?

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் சமீபத்தில், பத்திரம் வாங்குதலை அடுத்த ஆண்டு மத்தியில் குறைக்க உள்ளதாக குறைக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இது பொருளாதாரம் மீண்டு வரும் வேளையில், இந்த நடவடிக்கையானது எடுக்கப்படலாம் என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கிடையில் தான் வட்டி விகிதமும் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் அனுதினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன, எனினும் சீன நிறுவனம் திவால் ஆன நிலையில், ஆசிய சந்தைகள் சில சரிவில் காணப்பட்டாலும், இந்திய சந்தை உள்பட பலவும் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை கண்டுள்ளது. அதே போல தேசிய பங்குச்சந்தை நிப்டியும் புதிய உச்சத்தில் காணப்படுகிறது. இது மேலும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைய இது காரணமாக அமையலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1740 டாலர்களை உடைத்தால் மட்டுமே இன்னும் குறையலாம் என்ற நிலையில், கடந்த அமர்வில் 1740 டாலர்களை உடைத்துக் காட்டியிருந்தாலும், முடிவு விலையானது 1749.80 என்ற விலையில் முடிவடைந்துள்ளது அதேபோல இன்றைய தொடக்கத்திலும் 1746.25 டாலராக தொடங்கியுள்ளது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே இருப்பதால், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வாங்குவது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இடத்தில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலமான சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1,754.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலை, குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த அமர்வில் தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளியின் விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியிருந்தாலும், எனினும் நேற்றைய உச்சம், குறைந்த விலை என எதையும் உடைத்துக் காட்டவில்லை. தற்போது சற்று அதிகரித்து, 22.762 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று குறைந்து, 46,036 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என தெரிகின்றது. எனினும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 10,100 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 22 ரூபாய் குறைந்து, 60,765 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது எனினும் நேற்றைய உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 31 ரூபாய் குறைந்து, 4,357 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 34,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மீண்டும் இன்று 35,000 ரூபாய்க்கு கீழாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 31 ரூபாய் குறைந்து, 4,753 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 38,024 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 64.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 64,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது இன்று மாலை அமர்வில் வரவிருக்கும் டேட்டாவினை பொறுத்து விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+