தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று பெரியளவில் மாற்றம் இருக்காது.. ஆய்வாளர்களின் கணிப்பு ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது தங்கம் விலையை சரிய விடாமல் தடுத்துள்ளது.

இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. இதனால் தங்கம் விலையானது சரிவினைக் காணத் தொடங்கினாலும் பெரியளவில் சரிவினைக் காணவில்லை.

மாறாக தங்கம் விலையானது தொடர்ந்து 1840 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது.அதெல்லாம் சரி தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை எவ்வளவு? சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?இந்த இடத்தில் வாங்காலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்தடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்.. தாலிபான்கள் நிர்வாகத்தில் ஓட்டை..! வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்.. தாலிபான்கள் நிர்வாகத்தில் ஓட்டை..!

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இருந்தே வலுவான நிலையிலேயே இருந்து வருகின்றது. இது ஏற்றம் காணுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தார். ரஷ்யா மேலும் உக்ரைனுக்குள் நுழைந்தால், பொருளாதார தடையை விதிப்பேன் என்றும் அப்போது எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் & வெள்ளி விலையில் அழுத்தம்

தங்கம் & வெள்ளி விலையில் அழுத்தம்

பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க அமெரிக்க மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகித நடவடிக்கையினை எடுக்கலாம். குறிப்பாக இன்றும் நாளையும் (ஜனவரி 25 - 26ம்) நடக்கும், ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது மற்ற முதலீடுகளை குறைக்கிறது.குறிப்பாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது. இதற்கிடையில் அடுத்தடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,700 ரூபாயாகவும், அடுத்த சப்போர்ட் 48,100 ரூபாயாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

ரூ.7500 சரிவில் தங்கம்

ரூ.7500 சரிவில் தங்கம்

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்றத்தினையே கண்டு வருகின்றது.எனினும் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 7,500 ரூபாய்க்கும் மேலாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் 48,650 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் கடந்த ஆண்டு உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1842.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வரும் பட்சத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலை கடந்த சில தினங்களாகவே சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.843 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. அதே நேரம் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 92 ரூபாய் அதிகரித்து, 48,656 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இந்திய சந்தையினை பொறுத்த ப்வரையில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று அதிகரித்து இருந்தாலும், வெள்ளியின் விலை தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 74 ரூபாய் அதிகரித்து, 64,.32 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 4,605 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 36,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5024 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 40,192 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 60 பைசா குறைந்து, 64.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 641 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 64,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது வலுவாக காணப்பட்டாலும், வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.எப்படியிருப்பினும் சர்வதேச சந்தையின் எதிரொலி இருக்கும் என்பதால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வணிகம் செய்வது சிறந்தது. இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 25th January 2021: gold prices may choppy amid mixed cues

gold price on 25th January 2021: gold prices may choppy amid mixed cues/ தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று பெரியளவில் மாற்றம் இருக்காது.. ஆய்வாளர்களின் கணிப்பு ?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X