இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகின்றது.

இது தங்க முதலீட்டாளர்களுக்கும், நகை பிரியர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு என்றாலும், இன்னும் தங்கம் விலையானது குறையுமா? அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிக பென்ஷன்..! வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிக பென்ஷன்..!

அதோடு கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது தங்கம் விலையானது, 10 கிராமுக்கு 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருப்பதால், குறையும்போது வாங்கினால் இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கலாம். எப்படியிருப்பினும் இன்று அமெரிக்க சந்தை அமர்வில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளார்கள் கவனம்

முதலீட்டாளார்கள் கவனம்

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் ஜாக்சன் ஹோல் மைதானத்தில் பேசவிருக்கும் நிலையில், அதில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் திரும்பியுள்ளது. இதனால் இன்று சந்தையில் பெரியளவில் மாற்றமில்லை. எனினும் இன்று பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகள் வருமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து பங்கு சந்தைகள் உச்சம் தொட்டு வரும் நிலையில், மீண்டும் வலுவடைந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது சரிவினைக் காண வழிவகுத்துள்ளது. மேலும் வலுவான டாலரின் மதிப்பானது, மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை வாங்க அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், இது தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்ன், 5 மணி நேர கேண்டில் என இவை அனைத்தும் சற்று சரிவினைக் காணலாம் என்பது போல காணப்படுகிறது.. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைவது போலவே காணப்படுகின்றது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 2.45 டாலர்கள் குறைந்து, 1788.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சரிவில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், இன்றோடு இரண்டாவது நாளாக மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.18% குறைந்து, 23.733 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 47,160 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் விலை குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 176 ரூபாய் குறைந்து, 63,097 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் குறைந்து, 4,456 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 35,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் குறைந்து, 4,861 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 38,888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 68 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 26th, august 2021; gold prices flat ahead of Jerome Powell’s Jackson Hole speech

Gold price latest update.. Gold price on today, 25th august 2021, gold prices trade at Rs.47,431, silver around at Rs.63,200
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X