தங்கம் விலையானது கடந்த வார்த்தின் தொடக்கத்தில் விலை சரிவினைக் காண்பது போல இருந்தாலும், வார இறுதியில் மீண்டும் 1800 டாலர்களுக்கு மேலாகவே முடிவடைந்தது.
இது வரும் வாரத்தில் இன்னும் ஏற்றம் காணலாமோ? இனி விலை எப்படி இருக்கும்? என்ற பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1811.70 டாலர்களாக முடிவுற்றுள்ளது. சமீப காலமாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் வரும் வாரத்தில் இந்த லெவலை உடைத்துள்ள நிலையில் இன்னும் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தங்கம் விலை எப்படியிருக்கும்
இதற்கிடையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையானது வரும் வாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்காது ஒரு ரேஞ்ச்குள்ளேயே இருக்கலாம். எப்படியிருப்பினும் ஓமிக்ரான் பரவல் என்பது சந்தைக்கு எதிரான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
வரும் வாரத்தில் ஈக்விட்டி சந்தையில் இருந்து எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், சந்தையில் இருந்து, அதிகளவிலான முதலீடுகள் வெளியேறத் தொடங்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடாக அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரானுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.
விடுமுறை
வரும் வாரத்தில் பெரும்பாலான சர்வதேச சந்தைகளுக்கு விடுமுறையாகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் பெரியளவிலான மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் நிபுணர்கள் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி ரேஞ்ச் பவுண்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்
தங்கத்தின் முக்கிய சப்பொர்ட் விலையானது 47,920 - 47,770 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,240 - 48,400 ரூபாயாகும்.
இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 61,300 - 60,900 ரூபாயாகும். இதே இதன் ரெசிஸ்டன்ஸ் விலை 62,200 - 62,600 ரூபாயாகும்.
வரும் வாரத்தில் என்னசெய்யலாம்?
நீண்டகால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை வாங்கலாம். எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் மத்தியில் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் அதனை கண்கானித்து வாங்குவது நல்லது. இதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications