தங்கம் விலையானது (gold) பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இது மேற்கொண்டு விலை சரியுமா? கடந்த அமர்வில் நல்ல சரிவினைக் கண்ட நிலையில் இன்றும் தொடருமா?
தற்போது சர்வதேச சந்தையின் நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம், ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்?
கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? விலை இனி குறைய வாய்ப்பிருக்கிறதா? அடுத்து என்ன செய்யலாம்? முக்கிய லெவல்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
ஃபெடரல் கூட்டத்திற்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பு கட்டாயம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் முதலீட்டாளர்களின் பார்வை இந்த கூட்டத்தின் மேல் உள்ளது எனலாம். இதனால் முதலீடுகள் பெரியளவில் இல்லாமல், தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது.
பத்திர சந்தை
தொடர்ந்து அமெரிக்காவின் பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. எப்படியிருப்பினும் சர்வதேச நிபுணர்காள் தங்கம் விலையானது 1870 டாலர்களை உடைத்தால், 1890 டாலர்களை தொடலாம் என கணித்துள்ளனர்.அதேசமயம் 1839 டாலர்களையும் தொட வாய்ப்புள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.
டாலர் ஏற்றம்
கடந்த சில அமர்வுகளாக வலுவிழந்து காணப்பட்ட டாலரின் மதிப்பானது, தற்போது தொடர்ந்து வலுவான ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் டாலரின் மதிப்பானது 0.52% அதிகரித்து, 102.300 டாலர்கள் என்ற லெவவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஃபெடரல் வங்கி கூட்டத்தினை முதலீட்டாளர்கள் எதிர் நோக்கி காத்துக் கொண்டுள்ளனர்.
பங்கு சந்தைகள் ஏற்றம்
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் பணவீக்கம், ரெசசன் அச்சத்தின் மத்தியிலும், முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டெக்னிக்கலாக தங்கம் விலையானது, 1838 டாலர்களை உடைத்தால் இன்று சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.91 டாலர்கள் குறைந்து, 1843.31 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையினை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 21.778 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, 50,754 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 217 ரூபாய் குறைந்து, 61,317 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கிழாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 72 ரூபாய் குறைந்து, 4765 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 576 ரூபாய் குறைந்து, 38,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து, 5276 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 42,208 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே ஆபரண தங்கதினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications