தொடர்ந்து தடுமாற்றத்திலேயே காணப்படும் தங்கம் விலை.. சென்னையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது (gold) பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இது மேற்கொண்டு விலை சரியுமா?

தற்போது சர்வதேச சந்தையின் நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம், ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்?

கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? விலை இனி குறைய வாய்ப்பிருக்கிறதா? அடுத்து என்ன செய்யலாம்? முக்கிய லெவல்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

20 வருட உச்சத்தில் டாலர்

20 வருட உச்சத்தில் டாலர்

கடந்த சில அமர்வுகளாக வலுவிழந்து காணப்பட்ட டாலரின் மதிப்பானது, தற்போது மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. தற்போது 20 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

 ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, கட்டாயம் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் பெரியளவில் முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தங்கத்தில் பெரியளவிலான முதலீடுகள் செய்யப்படவில்லை. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தம் கொடுக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பெரும்பாலான நிபுணர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வட்டி விகிதம் கட்டாம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர். இது தொடர்ந்து டாலர் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றத்த்திற்கு வழிவகுக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது தங்கத்தின் விலையில் பெரியளவிலான ஏற்றத்தினை தடுத்துள்ளது.

வளர்ச்சி சரிவு

வளர்ச்சி சரிவு

பணவீக்க அச்சத்தின் மத்தியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான தரவும் மற்றும் தொழில் துறை சம்பந்தமான அறிவிப்புகள் சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டெக்னிக்கலாக தங்கம் விலையானது, சற்று தடுமாற்றத்திலேயே உள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.குறிப்பாக இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.64 டாலர்கள் அதிகரித்து,1852.29 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் அதிகபட்ச விலையினையும் உடைத்துள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.077 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் 22.142 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு அதிகரிக்கலாம். அதுவரையில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி தொடக்கத்தில் சற்று அதிகரித்து தொடங்கியுள்ளது. தற்போது 10 கிராமுக்கு 59 ரூபாய் அதிகரித்து, 50,930 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 316 ரூபாய் அதிகரித்து,62,109 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து வருகின்றது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 15 ரூபாய் அதிகரித்து, 4780 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 38,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 5215 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 41,720 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,150 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 66.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 656 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 66,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், எனினும் மீடியம் டெர்மிலும் சற்று தடுமாறத்திலேயே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கதினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+