தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. இது இனி எப்படியிருக்கும். விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? இனி என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது தற்போது அதன் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களை தாண்டி வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
ஓமிக்ரான் அச்சம்
கடந்த சில தினங்களாகவே சர்வதேச அளவில் ஓமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக ஓமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாக்கம் இருக்குமா?
தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முக்கிய டேட்டாக்கள்
அமெரிக்காவில் ஒமிக்ரான் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மறுபுறம், பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் சில்லறை விற்பனை குறித்தான தரவு, நவம்பர் மாதத்தில் 8.5% ஆக அதிகரித்துள்ளது. இது நுகர்வோரின் தேவை அதிகரித்து வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. மொத்தத்தியில் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே இது சுட்டிக் காட்டுகின்றது.
லாக்டவுன் இல்லை
ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் ஓமிக்ரான் தாக்கம் இருந்தாலும் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவில்லை. இதே போன்று பிரான்ஸ் கட்டுப்பாடுகளை அதிகரித்தாலும், புத்தாண்டு தினத்தன்று கட்டுப்பாடுகள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா நிலவரம்
இதற்கிடையில் சீனாவின் முக்கிய நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. எனினும் சீனாவின் யுவான் கரன்சி ஒரு நெகிழ்வான நிலையில் இருக்கும். இது பெரியளவில் மாற்றம் இருக்காது. இது சீரான அளவில் நிலையானதாக இருக்கும். எனினும் 2022ல் ஒட்டுமொத்த கடன் விகிதம் அதிகரிக்கும் என்பதையும் சீனாவின் பீப்பிள்ஸ் வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
டாலர் சப்போர்ட்டாக அமையலாம்
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, வருட இறுதி நாட்களில் தங்கத்திற்கு மேற்கொண்டு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை, சர்வதேச பங்கு சந்தைகள் என்பது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.55 டாலர் அதிகரித்து, 1811.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாக வலுவாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து தான் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.27% அதிகரித்து, 23.052 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 89 ரூபாய் அதிகரித்து, 48,155 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் இது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 118 ரூபாய் அதிகரித்து, 62,419 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இதுவரையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு சற்று அதிகரித்து, 4556 ரூபாயாகவும், இதே சவரனுக்கு சற்று அதிகரித்து, 36,448 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு சற்று அதிகரித்து, 4,970 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையிலும் பெரியளவில் இதுவரையில் மாற்றமில்லை. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் சர்வதேச சந்தைகளில் விடுமுறை, ஓமிக்ரான் அச்சம் என பலகாரணிகளுக்கும் மத்தியில் தங்கம் விலையில் மீடியம் டெர்மில் சற்று ஏற்ற இறக்கம் காணப்படலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதேபோல ஆபரண தங்கம் விலையும் பெரியளவில் மாற்றாமில்லை. ஆக தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!



Click it and Unblock the Notifications