சூப்பர் சான்ஸ்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பலமான எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ஆனால் மார்ச் மாதத்தில் வட்டியில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி.

இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சர்வதேச சந்தை முதல் கொண்டு, இந்திய சந்தை வரையில் சரிவில் காணப்படுகின்றது.

இது நடப்பு வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கியதையடுத்து, வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்காவின் அதிரடியான அறிவிப்புக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்படாவிட்டாலும், மார்ச் மாதம் கட்டாயம் உயர்த்தப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதுவே தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

நீண்டகால நோக்கில் என்னவாகும்?

நீண்டகால நோக்கில் என்னவாகும்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம், பணவீக்கம், தேவை அதிகரிப்பு, பரவி வரும் ஓமிக்ரான் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம். இதனால் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

1800 டாலரை உடைத்த தங்கம் விலை

1800 டாலரை உடைத்த தங்கம் விலை

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதுவும் மற்ற முதலீடுகளில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது.குறிப்பாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் முக்கிய முடிவுக்கு மத்தியில், தங்கம் விலையானது அதன் முக்கிய லெவலான 1800 டாலர்களையும் உடைத்துள்ளது. இதனை உடைத்தால் தான் தங்கம் விலையானது மேலே செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சமீபத்திய தினங்களாகவே மேல் இருந்து வந்த நிலையில், அதனை தற்போது மீண்டும் 1800 உடைத்துள்ளது.

 டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

தங்கத்தில் டெக்னிக்கல் பேட்டர்ன் என்பது, விலை சற்று சரிவினைக் காணலாம் என்பதே போன்றே உள்ளது. இது டிசெண்டிங் டிரை ஆங்கில் பேட்டர்னில் உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு உச்சத்தில் இருந்து 8,400 ரூபாய்க்கும் மேலாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான இடமாகவே பார்க்கப்பட்டாலும், பொறுத்திருந்து வாங்கினால் இன்னும் லாபகரமானதாக இருக்கும்.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 800 - 850 டன்னாக அதிகரிக்கலாம் என்றும் இது கடந்த ஆண்டில் 797.3 டன்னாகவும் உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என WGC-யின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான சோமசுந்தரம் பி ஆர் தெரிவித்துள்ளார்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து,1796.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே வெள்ளி விலை கடந்த சில தினங்களாகவே சற்று குறைந்து வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.777 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே காணப்படுகின்றது. அதே நேரம் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து,47,871 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 61,984 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,549 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 36,392 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4963 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 39,704 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,630 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.40 பைசா குறைந்து, 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1400 ரூபாய் குறைந்து, 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினையும், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+