சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த சில அமர்வுகளாக சரிவினைக் கண்டாலும், மீண்டும் ஏற்றம் காணும் விதமாக இருந்து வருகின்றது.

இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் விலை இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்? இது வாங்க சரியான நேரமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தை முந்தும் மைக்ரோசாப்ட்.. மாஸ்காட்டும் சத்ய நாடெல்லா..! ஆப்பிள் நிறுவனத்தை முந்தும் மைக்ரோசாப்ட்.. மாஸ்காட்டும் சத்ய நாடெல்லா..!

இதற்கிடையில் நிபுணர்களின் கணிப்பு என்ன? நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளது, ஆனால் இந்திய சந்தையில் விலை சற்றே குறைந்துள்ளது. அப்படி எனில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, அமெரிக்க சந்தையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை தற்போது சற்று குறைந்து இருந்தாலும், இது மீண்டும் அதிகரிக்கவே செய்யும்.

விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கலாம்

விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கலாம்


தற்போது தொடங்கியுள்ள விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது முதலீட்டு ரீதியாகவும், ஆபரணத் தங்கத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலையானது பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனலாம்.

சரிவில் பங்குச்சந்தைகள்

சரிவில் பங்குச்சந்தைகள்

கடந்த சில தினங்களாகவே சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர்ந்து, அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இது சர்வதேச அளவிலான பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், தற்போது மூன்றாம் கட்ட அலையின் அச்சம் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை சரிவு ஏன்?

தேவை சரிவு ஏன்?

உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கத்தின் தேவையானது நிதி முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் குறைந்துள்ளது. அதேசமயம் நகை உற்பத்தியாளர்கள், மத்திய வங்கிகள், சிறிய சில்லறை முதலீட்டாளர்கள், தங்க காயின் மற்றும் பார்கள் வாங்குவது அதிகம் உள்ளதாக WGC தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 831 டன்னாக தேவை குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 894.4 டன்னாக இருந்தது. இதே 2019ல் 1084.9 டன்னாக இருந்தது என சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

தற்போது பல நாடுகளிலும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் அந்த நாட்டின் பல இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 4.15 டாலர்கள் அதிகரித்து, 1802.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ள அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று மீடியம் டெர்மில் மீண்டும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது சற்று குறைந்து, 24.148 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று குறைந்து, 47,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தற்போது சற்று குறைந்திருந்தாலும், மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 215 ரூபாய் குறைந்து, 64,950 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் காணப்படுகின்றது. எனினும் உச்சம், குறைந்த விலையினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலையானது 17 ரூபாய் அதிகரித்து, 4,525 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 35,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து கடந்த சில தினங்களாக 36,000 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் அதிகரித்து, 4,936 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 39,488 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு சற்று குறைந்து 69.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 69,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. இன்றோடு மூன்று தினங்களாகவே வெள்ளி விலையானது குறைந்து காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 28th October 2021; gold prices little down in MCX market

Gold price latest update.. Gold price on 28th October 2021; gold prices little down in MCX market
Story first published: Thursday, October 28, 2021, 11:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X