சாமானியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. 2-வது நாளாக சரியும் தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், கடந்த சில அமர்வுகளாகவே சற்று அதிகரித்தே காணப்பட்டது. ஆனால் இன்று சற்று சரிவினைக் கண்டிருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த சரிவு இப்படியே தொடருமா? இது இனி எப்படியிருக்கும். விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? இனி என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

3 லட்சம் பேரும் WFH-லேயே இருங்க.. கூப்பிடும்போது மட்டும் வாங்க.. ஐடி நிறுவனத்தின் செம அப்டேட்!3 லட்சம் பேரும் WFH-லேயே இருங்க.. கூப்பிடும்போது மட்டும் வாங்க.. ஐடி நிறுவனத்தின் செம அப்டேட்!

தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், தற்போதும் கூட அதன் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது.

 ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு

ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு

கடந்த சில தினங்களாகவே சர்வதேச அளவில் ஓமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பொருளாதாரம் என்னவாகும்?

பொருளாதாரம் என்னவாகும்?


ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலையின் தாக்கத்தின்போது பொருளாதாரம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. இந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் ஓமிக்ரான் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் இந்த அலை எந்த மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை நிலவரம்
 

பத்திர சந்தை நிலவரம்

தொடர்ந்து முந்தைய வாரங்களில் ஏற்றம் கண்டு வந்த பத்திர சந்தையானது, கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகின்றது. அதோடு அமெரிக்காவில் பல ஆயிரம் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

வட்டி விகித மாற்றம்

வட்டி விகித மாற்றம்

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து புத்தாண்டு விடுமுறைகளும் வரவிருப்பதால் இதுவும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய லெவலாக அவுன்ஸூக்கு, 1820 டாலர்களாக பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்தால், அடுத்ததாக இந்த லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

தொடர்ந்து ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம். இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் வரவிருக்கும் நாட்களில் வெளியாகவிருக்கும் டேட்டாக்களும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் வீடு விற்பனை குறித்தான தரவு, பத்திர சந்தை, பணவீக்கம், ஓமிக்ரான் பரவல் என பலவும் டாலரின் மதிப்பில் பெரும் மாற்றத்தினை கொடுக்கலாம்.

 காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.75 டாலர் குறைந்து, 1806.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.17% குறைந்து, 23.082 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 101 ரூபாய் குறைந்து, 47,930 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக காணப்படுகின்றது. எனினும் இது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 123 ரூபாய் குறைந்து, 62,388 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை


ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 17 ரூபாய் குறைந்து, 4527 ரூபாயாகவும், இதே சவரனுக்கு சற்று குறைந்து, 36,216 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 4,939 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் பெரியளவில் இதுவரையில் மாற்றமில்லை. இது தற்போது கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளி விலையில் பெரியளவில் மாற்றமில்லை. ஆக தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 29th December 2021: gold jewellery prices fall second day in a week

gold price on 29th December 2021: gold jewellery prices fall second day in a week/சாமனியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. 2-வது நாளாக சரியும் தங்கம் விலை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X