தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும், கடந்த சில அமர்வுகளாகவே பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. இந்த நிலையில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

இது நீண்ட கால முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இது அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே வலுவிழந்துள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது.

மெதுவான பொருளாதார வளர்ச்சி

மெதுவான பொருளாதார வளர்ச்சி

அமெரிக்காவின் ஜிடிபி குறித்தான விகிதமானது பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினையே கண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. எப்படியிருப்பினும் டாலரின் மதிப்பும் பெரியளவில் மாற்றமின்றி சற்று வலுவான நிலையிலேயே காணப்படுகிறது.

மீண்டும் ஆய்வு செய்யப்படலாம்

மீண்டும் ஆய்வு செய்யப்படலாம்

அமெரிக்காவின் ஜிடிபி விகிதமானது எதிர்பார்ப்பினை விட குறைந்துள்ள நிலையில், பத்திரம் வாங்குதல் குறித்தான முக்கிய முடிவுகள் விரைவில் மீண்டும் ஆய்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடம் தங்கத்தின் விலையானது சற்று சரிவு கண்டுள்ளது.

புராபிட் புக்கிங் செய்திருக்கலாம்
 

புராபிட் புக்கிங் செய்திருக்கலாம்

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அவுன்ஸூக்கு 1,800 டாலர்களுக்கு அருகிலேயே வர்த்தகமாகி வருகின்றது. அதோடு இன்று வார இறுதி, மாத இறுதி என்பதால் தங்கத்தில் கிடைத்த லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் சந்தையானது சற்று சரிவில் காணப்படுகின்றது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

தொடர்ந்து சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், தங்கத்தில் முதலீட்டு ரீதியாகவும், பாதுகாப்பு புகலிடத்திலும் முதலீடுகள் அதிகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ளதை அடுத்து, தங்கத்தின் தேவையை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 4.40 டாலர்கள் குறைந்து, 1,798.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் வெள்ளி விலை சரிவில் காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாக உள்ளது. நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துள்ளது. தற்போது சற்று குறைந்து, 24.082 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 69 ரூபாய் குறைந்து, 47,892 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இது கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து 8,300 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 125 ரூபாய் குறைந்து, 64,805 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தொடங்கியுள்ளது நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 13 ரூபாய் குறைந்து, 4,512 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து, 36,096 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 14 ரூபாய் குறைந்து, 4,922 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 39,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 49,220 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 68.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 68,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இன்றோடு 4 நாட்களாக வெள்ளியின் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் மற்றும் இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதனை வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 29th October 2021; gold prices down Rs.8,300 above from all time high

Gold price latest update.. Gold price on 29th October 2021; gold prices down Rs.8,300 above from all time high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X