சரிவில் தங்கம் விலை.. மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த அமர்வில் எதிர்பாராத விதமாக பலத்த சரிவை கண்டுள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் விலை இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்? இது வாங்க சரியான நேரமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த அமர்வில் ஏற்பட்ட பலத்த சரிவினையடுத்து, இன்று தங்கம் விலை என்பது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை ஏற்றத்திற்கு மத்தியில், இன்னும் சரியலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. மக்கள் மகிழ்ச்சி..! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. மக்கள் மகிழ்ச்சி..!

எப்படி இருப்பினும் இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் உணர்வு

முதலீட்டாளர்களின் உணர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே 1740 டாலர்களை உடைக்காமலேயே காணப்பட்டது. இந்த நிலையில் இந்த லெவலை உடைத்தால் தங்கம் விலையானது மேலும் அழுத்தத்தினை காணலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது. இதற்கிடையில் தான் கடந்த அமர்வில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1740 டாலர்களை உடைத்து, 1727.9 என்ற லெவலுக்கு இறங்கி, முடிவில் 1737.50 டாலர்களாக முடிவுற்றது மேலும் இன்றைய தொடக்கத்திலும் 1735.45 டாலர்களாக தொடங்கியது. ஆக இது தங்கத்தின் விலையில் மேலும் அழுத்தத்தினையே கொடுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்

டெக்னிக்கலாக தங்கம் விலையானது கடந்த வார குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு 5 மணி நேரம், தினசரி, வார கேண்டில் என அனைத்திலும், டெக்னிக்கலாக தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து தங்கத்தை வாங்குவது நல்லது.

கவலையளிக்கும் சீன தரவுகள்
 

கவலையளிக்கும் சீன தரவுகள்

சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில், தற்போது கடும் மின்வெட்டு நிலவி வருகின்றது. இதனால் அங்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் முக்கிய உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியானது வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பொருளாதாரத்தில் தாக்கம்

பொருளாதாரத்தில் தாக்கம்

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, தேவை மீண்டுவந்து கொண்டுள்ள நிலையில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் பொருளாதாரத்தில் அது எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பணவீக்கம் குறித்த கவலை

பணவீக்கம் குறித்த கவலை

அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை கண்டு இருந்தாலும், அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், இது பணவீக்கத்திற்கு தூண்டுதலாக அமையலாம் என்ற கவலையும் இருந்து வருகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கமானது மீண்டும் விலை அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையானது 1750 டாலர்கள் என்ற நிலையிலேயே வர்த்தகமாகி வந்தது. இது 1740 டாலர்களை உடைத்தால் மேலும் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அதை உடைத்து உள்ள நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் அவுன்ஸூக்கு 1700 டாலர்கள் என்ற லெவலை தொடலாம் என கணித்துள்ளனர்.

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

பாதுகாப்பு புகலிடமான தங்கம்

எப்படி இருப்பினும் தற்போது அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கையானது எதிர்பார்த்த அளவைவிட, 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சி கண்டு வருவதையே காட்டுகின்றது. இது நீண்ட கால நோக்கில் தங்கத்திற்கு பாதுகாப்பு பாதுகாப்பாக அமையலாம்.

இதே இந்தியாவைப் பொருத்தவரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் தங்கம் விலையானது சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1738.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ள அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று மீடியர்ம் டெர்மில் மீண்டும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்து, 22.465 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 45,991 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து, 64,444 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக காணப்படுகின்றது. எனினும் உச்சம், குறைந்த விலையினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,350 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 34,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து கடந்த சில தினங்களாக 35,000 ரூபாயாகு கீழாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,746 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 37,968 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 47,460 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 64.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 64,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாகவே வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில், மற்ற இன்ட்ராடே கேண்டில்களில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் ஆக மீடியம் டெர்ம் மற்றும் இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். இதே நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போது வாங்கினாலும், இன்னும் குறையும் போது வாங்கினால் இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 29th September 2021; gold prices today struggle after sharp fall in MCX & Comex

Gold price latest update.. Gold price on 29th September 2021; gold prices today struggle after sharp fall in MCX & Comex
Story first published: Wednesday, September 29, 2021, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X