சாமானியர்களை குளிர வைத்த தங்கம் விலை.. எவ்வளவு சரிந்திருக்கு பாருங்க..!

மத்திய பட்ஜெட் 2022ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்று தங்கத்தின் மீதான இறக்குமதி வரியினை குறைக்கலாம் என்று. ஆனால் அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை கொடுத்தது.

இதற்கிடையில் கடந்த அமர்வின் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி இருந்த தங்கம் விலையானது பட்ஜெட்டுக்கு பிறகு, பலத்த ஏற்றத்தினையும் கண்டது.

இதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், சர்வதேச சந்தைகளும் உச்சம் தொட்டன. இதன் காரணமாக தங்கம் விலையானது மாலை அமர்வில் கடும் ஏற்றத்தினை கண்டது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

கடந்த அமர்வில் அமெரிக்க டாலரின் மதிப்பானது பெரும் சரிவினைக் கண்ட நிலையில், தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த ஏற்றத்தினை கண்டது. எனினும் இன்று மீண்டும் டாலரின் மதிப்பானது உச்சம் தொட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையில் இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது மார்ச் மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது குறைய காரணமாக அமைந்துள்ளது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க பணவீக்கம் என்பது முக்கிய காரணமாக அமையலாம். மேலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இதுவும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையே சர்வதேச அளவில் இருந்து வருகின்றது. ஆக சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

உக்ரைன் பிரச்சனை

உக்ரைன் பிரச்சனை

இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனை இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் விலையானது அதன் முக்கிய லெவலாக பார்க்கப்படும் 1800 டாலர்களை உடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.65 டாலர்கள் குறைந்து, 1798.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.698 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 67 ரூபாய் குறைந்து,47,855 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 187 ரூபாய் அதிகரித்து, 61,545 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,514 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 36,112 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4924 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 39,392 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையானது இன்று மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 65.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 656 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 65,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஆக இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+