6 வருடத்தில் இல்லாதளவு வீழ்ச்சி..இது வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலம் பொன் போன்றது என்பார்கள். உண்மையில் இது பொன்னான காலம் தான். அப்படி என்ன காரணம். ஏன் நிபுணர்கள் இப்படி கூறுகின்றனர்? உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

 

பொதுவாக தங்கம் என்பது சர்வதேச அளவில் மிக விரும்பப்படும் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகின்றது. எந்தவொரு அசாதாரணமான சூழ்நிலைகளிலும் முதலீட்டாளர்களுக்கு கைகொடுப்பதால் தான் இதனை பாதுகாப்பு புகலிடமாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்க பெரும் ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.

ரூ.8000 சரிவில் தங்கம் விலை

ரூ.8000 சரிவில் தங்கம் விலை

ஏனெனில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. அதுவும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 8,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், இது நீண்டகால நோக்கில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

டெல்டா வகை கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி தங்கத்திற்கு ஆதரவளிக்க பல காரணிகள் சந்தையில் வந்து கொண்டுள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கம், பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளுக்கும் ஓமிக்ரான் மத்தியில் மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆக இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, ஏற்கனவே கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இது மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கலாம்
 

விலை அதிகரிக்கலாம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 1760 - 1835 என்ற லெவலிலேயே காணப்பட்டது. இது புராபிட் புக்கிங் செய்யும் விதமாக 2021 வருட இறுதியில் சற்று குறைந்தே காணப்பட்டது. எனினும் இனி வரும் காலங்களில் தங்கம் விலையானது அதிகரிக்க கூடும். இதன் அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1880 - 1900 டாலர்களாகும். இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்கலாம். இதன் காரணமாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் விலையானது கடந்த அமர்வில் இறுதியாக சர்வதேச சந்தையில் 1830 டாலர்களாகவும், இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 48,083 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. தங்கம் விலையானது தற்போது 1830 என்ற லெவலில் காணப்பட்டாலும் அடுத்த சப்போர்ட் லெவலாக 1760 டாலர்களாக காணப்படுகின்றது. 1760 - 1835 என்ற லெவலையும் கண்கானித்துக் கொண்டிருப்பது நல்லது.

இந்திய சந்தையில் எதிர்பார்ப்பு

இந்திய சந்தையில் எதிர்பார்ப்பு

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தற்போது 48000 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது அடுத்ததாக 49,300 - 49,500 ரூபாய் என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும், இதே 47,800 - 47,900 ரூபாய் என்பதும் முக்கிய சப்போர்ட்டாக இருக்கலாம். நடப்பு ஆண்டில் டாலரின் மதிப்பு அதிகரித்தாலும் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்பது விலை அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முக்கிய முதலீடு

முக்கிய முதலீடு

அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, முதலீடுகளிலும் முக்கிய அம்சம் பொருந்திய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போர்ட்போலியோ முதலீடுகளில் தங்கம் அவசியமான முதலீடாகவும் மாறியுள்ளது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தை நிலவரம், தேவை, முக்கிய காரணிகளுக்கு ஏற்ப மாற்றம் காணும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

ஆர்வம் குறைவு

ஆர்வம் குறைவு

கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்தாலும், மிக வேகமாக போடப்பட்டு வந்த தடுப்பூசி, குறைந்த வட்டி விகிதம், வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்தான பேச்சு வார்த்தைகள், பத்திரம் வாங்குதல் குறைப்பு பற்றிய பேச்சு வார்த்தை, சர்வதேச பொருளாதாரம், பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம், கிரிப்டோக்கள் மீதான ஆர்வம் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்துள்ளன.

வட்டி விகிதம் மாற்றம்

வட்டி விகிதம் மாற்றம்

எனினும் நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தில் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். பொதுவாக வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். 2022ல் தங்கம் விலையானது மூன்று முறையாவது அதிகரிக்கப்படலாம் என அமெரிக்கா முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கம் நடப்பு ஆண்டிலும் அதன் கம்பீரத்தினை இழக்குமா? பாதுகாப்பு புகலிடம் என்ற பெயர் மாறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குறைந்த விலையில் வாங்கலாம்

குறைந்த விலையில் வாங்கலாம்

எனினும் தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 10 கிராமுக்கு அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 8,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். ஆக இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க கூடும்.மேலும் நீண்டகால நோக்கில் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலை

பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலை

நடப்பு ஆண்டில் ஜிடிபி விகிதம் நேர்மறையாக இருக்கலாம். எனினும் ஒரு கீழ் நோக்கிய திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஈக்விட்டி சந்தையிலும் பங்குகள் ஓவர் வேல்யூவில் இருப்பதால் ஒரு பெரும் சரிவு இருக்கலாம். ஆக அந்த சரிவு தங்கத்திற்கு சாதகமான அமையக்கூடும்.

 காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

நடப்பு வாரத் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் தான் காணப்பட்டது. ஆனால் வாரத்தின் பிற்பாதியில் பெரும் ஏற்றத்தினை கண்டு முடிவடைந்துள்ளது. வாரத் தொடக்கத்தில் 1810.20 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலை, செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 1789.10 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1831.40 டாலர்களாக அதிகபட்சமாக அதிகரித்து, முடிவில் 1830.40 டாலர்களாக முடிவுற்றது.

 காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து முடிவடைந்துள்ளது.வாரத் தொடக்கத்தில் 22.680 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலை, புதன் கிழமையன்று 22.635 டாலர்கள் வரையில் குறைந்தபட்சம் சென்று, வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 23.410 டாலர்களாக அதிகரித்து, பின்னர் முடிவில் 23.358 டாலர்களாக முடிவுற்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, வார தொடக்கத்தில் சரிவினைக் கண்டது. எனினும் பிற்பாதியில் மீண்டும் ஏற்றம் கண்டது. இது கடந்த வாரத் தொடக்கத்தில் 48,119 ரூபாயாக தொடங்கியது. இது செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 48,328 ரூபாயாக உச்சம் தொட்டது. எனினும் அடுத்த நாளே குறைந்தபட்சமாக 47,577 ரூபாயாக சரிவினைக் கண்டது. எனினும் முடிவில் வெள்ளிக்கிழமையன்று 48,099 ரூபாயாக முடிவுற்றது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வாரத் தொடக்கத்தில் 62,187 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலையானது, செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 63,239 ரூபாயாக உச்சம் தொட்டது. இதே வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 61,223 ரூபாய் வரையில் சென்று, வெள்ளிக் கிழமையன்று முடிவில் 62,660 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 34 ரூபாய் அதிகரித்து, 4559 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் அதிகரித்து, 36,472 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த வாரத் தொடக்கத்தில் 36,440 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 4,973 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 39,784 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 49,730 ரூபாயாகவும் உள்ளது. இது கடந்த திங்கடகிழமையன்று 49,690 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து, 66.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 666 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து, 66,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 2nd January 2022: gold prices logs biggest fall in 6 years, its right time to buy gold

gold price on 2nd January 2022: gold prices logs biggest fall in 6 years, its right time to buy gold/6 வருடத்தில் இல்லாதளவு வீழ்ச்சி..இது வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X