சரிவில் தங்கம் விலை.. இது தான் வாங்க சரியான நேரம்.. நிபுணர்களின் பலே கணிப்ப பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், சற்று சரிவில் காணப்படுகிறது. இன்றும் விலை குறைந்திருந்தாலும் பெரியளவில் குறையவில்லை.

குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது விலை இன்னும் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை ரேஞ்ச் பவுண்ட்

தங்கம் விலை ரேஞ்ச் பவுண்ட்

தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தினையே ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் தங்கம் விலையானது இப்படி பெரியளவில் மாற்றமின்றி இருப்பது, மீண்டும் உச்சம் தொடத் தானோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரூபாய் மதிப்பினால் அழுத்தம்

ரூபாய் மதிப்பினால் அழுத்தம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் அதே நேரத்தில், இந்திய சந்தையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தங்கத்தின் மதிப்பில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

 நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது மேற்கொண்டு புதிய உச்சத்தினை எட்டலாம். இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் உடைக்கலாம். டாலரின் மதிப்பு வலுவிழந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையக் கூடும். அமெரிக்காவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க போவதாக எந்த வித கையொப்பமும் போடப்படவில்லை. ஆக பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி பாதைக்கு எட்ட வேண்டும் என்று தான் மத்திய வங்கி இந்த நடவடிக்கையை கடைபிடித்து வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

அதோடு அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா என்பது மேற்கொண்டு, பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைக்கு வட்டி விகிதம் என்பது அதிகரிக்கப்படமாட்டாது என எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு விதத்தில் தங்கத்திற்கு எதிரானதாக இருந்தாலும், பணவீக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு உச்சமான 56,191 ரூபாயினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் குறித்தான டேட்டா தங்கத்தின் விலையை இன்னும் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு தொடலாம்

எவ்வளவு தொடலாம்

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஆப்கான் பிரச்சனையும் உருவெடுத்து வருகின்றது. ஆக இதனால் நடப்பு ஆண்டின் கடைசி மாதத்தில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவுன்ஸூக்கு 1950 - 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ஆப்கான் பிரச்சனையும் உருவெடுத்து வருகின்றது. ஆக இதனால் நடப்பு ஆண்டின் கடைசி மாதத்தில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவுன்ஸூக்கு 1950 - 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள்

பங்கு சந்தைகள்

உச்சம் தொடும் பங்கு சந்தைகள் தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம் என்றாலும், தொடர்ந்து இது நீடிக்குமா? என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்தாலும். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு

தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2120 டாலர்களையும், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 58,000 ரூபாயினையும் தொடலாம் என நிபுனர்கள் கருதுகின்றனர்.

இதே வெள்ளி விலையானது 61,500 ரூபாய் என்பது அடுத்த முக்கிய சப்போர்ட்டாக உள்ளது. இதனை உடைத்தால் கடந்த ஆண்டு உச்சத்தினை உடைக்கலாம். இதே டாலரில் 23.35 டாலராகவும், இதனை சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு கடந்த ஆண்டு உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையும் உடைத்தால் கடந்த 2011ம் ஆண்டில் சென்ற 49 டாலர்களையும் உடைக்கலாம். தொழிற்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இதன் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு கிட்டதட்ட 1 டாலர் குறைந்து, 1815.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலை, உச்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்து, 24.205 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 47,068 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் விலை குறைந்துள்ளது. தற்போது கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்து, 63,552 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,451 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 35,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 மேலாக காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,856 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 38,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 0.10 பைசா குறைந்து, 68.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 68,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளி விலையானது, இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்பதால் அதனையும் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 2nd, September 2021; gold prices flat today, Experts says gold may hit new high

Gold price on 2nd, September 2021; gold prices flat today, Experts says gold may hit new high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X