கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 2 மாத சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் அதே லெவலில் காணப்படுகின்றது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு, 50,200 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு 52,395 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது.

இது இன்று எப்படியிருக்கும். இன்று விலை எப்படியுள்ளது? சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக டாலரின் மதிப்பானது கடந்த அமர்வில் 108.983 என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட்ஜிங்

ஹெட்ஜிங்

தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் நிலையில், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் முன்னதாக கணித்தனர். எனினும் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் நீண்டகால நோக்கில் அதிகரிக்குமா? என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது குறையலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

முக்கிய லெவல் உடைப்பு

முக்கிய லெவல் உடைப்பு

கடந்த அமர்வில் தங்கத்தின் முக்கிய லெவலான 1700 டாலர்களை உடைத்து காட்டியுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலை சரியாலாமோ என்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் முடிவு விலையானது 1700 டாலர்களுக்கு மேலாகவே முடிவடைந்துள்ளது.எனினும் தங்கத்தின் அடுத்த முக்கிய லெவலாக 1675 டாலராக உள்ளது.

 காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1708.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்து, 17.665 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 50,080 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கேப் டவுனதொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 92 ரூபாய் அதிகரித்து, 52,695 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை


சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4695 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 37,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 5122 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40,976 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து , 51,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 58 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 580 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 58,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,950

மும்பை - ரூ.46,950

டெல்லி - ரூ.46,400

பெங்களூர் - ரூ.46,450

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,950

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+