தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1750 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது.
சற்று சரிவில் காணப்பட்டாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது அதன் 20 வருட உச்சத்தில் இருந்து சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வட்டி என்னவாகும்?
செப்டம்பர் மாத அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இது டாலரின் மதிப்புக்கு ஊக்கத்தினை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.
வாங்க தூண்டும் ஆர்வம்?
எனினும் குறைந்த விலையில் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டலாம் என்பதால், இது குறைந்த விலையில் வாங்க தூண்டலாம். அதோடு வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிப்படுவது ரெசசனுக்கான வாய்ப்பினை அதிகரிக்கலாம். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
சர்வதேச தங்கம் விலை நிலவரம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 2.05 டாலர்கள் குறைந்து, 1747.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சர்வதேச வெள்ளி விலை நிலவரம்?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.39% குறைந்து, 18.485 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 51,140 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கேப் டவுன் ஆகி காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் கிலோவுக்கு 297 ரூபாய் குறைந்து, 54,032 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4790 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 38,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 5225 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,800 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 52,250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 60.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 60,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,900
மும்பை - ரூ.47,250
டெல்லி - ரூ.47,400
பெங்களூர் - ரூ.47,260
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,900
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை என்ன? அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முடியுமா?

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

Wiproஇல் பங்கு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! 19% லாபத்தில் உங்க பங்குகளை விற்க செம வாய்ப்பு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications