தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. பெரும் நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னதான் கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி வந்தாலும், நம் மக்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகமும், காதலும் என்றுமே குறையாது எனலாம். அந்தளவுக்கு மக்களுடன் பின்னி பிணைந்திருக்கும் தங்கத்தின் மீது ஆர்வம் உண்டு.

இது வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, தங்க முதலீடுகளிலும் அப்படித் தான். இன்றைய காலகட்டத்தில் எந்த ஆலோசகர்களும் போர்ட்போலியோ முதலீடுகளில் தங்கத்தினை வேண்டாம் என தடுக்கிறார்களா? ஏனெனில் இது சரியான பாதுகாப்பு புகலிடமாகவும் இருக்கின்றது.

காலத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் விதம் தான் மாறியுள்ளதே தவிர, அடிப்படை என்பது மாறவில்லை. ஆக தங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மத்தியில், இன்று வரையில் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சாமானியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. 2-வது நாளாக சரியும் தங்கம் விலை..! சாமானியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. 2-வது நாளாக சரியும் தங்கம் விலை..!

மூன்றாவது நாளாக சரிவு

மூன்றாவது நாளாக சரிவு

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மூன்றாவது நாளாக இன்றும் சரியத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்த சரிவு தொடருமா? இனி எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்து என்ன செய்யலாம். என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 5% சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் இது பரவி வரும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில், சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக உணர்வு பூர்வமாக தங்கம் விலையானது அவுன்ஸூகு 1800 டாலர்களை உடைத்தால் மேலே செல்லலாம் என்ற உணர்வு இருந்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

சர்வதேச சந்தையில் கிறிஸ்துமஸ் அதனை தொடர்ந்து புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து விடுமுறைகள் இருந்து வருகின்றது. இதனால் சந்தையில் பெரியளவிலான மாற்றங்கள் இல்லை. இந்தியாவினை பொறுத்தவரையில் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை என்பது வரவுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

வட்டியில்லா முதலீடு

வட்டியில்லா முதலீடு

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் டாலரின் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

இப்படி தொடர்ந்து பல காரணிகளும் தங்கத்திற்கு எதிராக இருந்து வரும் நிலையில், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அடுத்த ஆண்டில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை கடுமையாக்கலாம். இது டாலரின் மதிப்பினை மேலும் வலுவடைய செய்யலாம். இது தங்கத்தின் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

வெள்ளியின் தேவை

வெள்ளியின் தேவை

தங்கம் விலை மட்டும் அல்ல, சமீப காலமாக வெள்ளி விலையும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது டாலர் மதிப்பு, பத்திர சந்தை, மெதுவான பொருளாதார வளர்ச்சி, ஓமிக்ரான் அச்சம், ரியல் எஸ்டேட் துறை, பத்திர சந்தை, ஈக்விட்டி சந்தை என பலவும் வெள்ளிக்கு எதிராகவே இருந்து வருகின்றன. இதனால் வெள்ளியின் தேவையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில்  தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 5.15 டாலர் குறைந்து, 1800.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் சந்தையில்  வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.57% குறைந்து, 22.727 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து, 47,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 261 ரூபாய் குறைந்து, 61,577 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 19 ரூபாய் குறைந்து, 4508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 36,064 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 4,918 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 39,344 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா குறைந்து 65.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 65,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 30th December 2021: gold rate again fall in third day in a row

gold price on 30th December 2021: gold rate again fall in third day in a row/பெரும் நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள்.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை..!
Story first published: Thursday, December 30, 2021, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X